*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
அத்தியாயம் *8 [அல்அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள்)* வசனம் *61- 70* வரை]
|| *கேள்வி 87* ||
1) *யாருக்கு அல்லாஹ் போதுமானவன்*?
(8:62,64) *நபிக்கும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் (*இறைநம்பிக்கையாளர்களுக்கும்*) அல்லாஹ் போதுமானவன்.
2) வசனம் 8:63 நம்பிக்கையாளர்களுக்குச் சொல்லும் செய்தி என்ன?
*உள்ளங்களை இணைப்பது அல்லாஹ்வின் வல்லமையால் மட்டுமே சாத்தியம்* என்பதும்..
*மனிதர்களால் எவ்வளவு செல்வத்தைச் செலவிட்டாலும் உள்ளங்களை இணைக்க முடியாது* என்ற கருத்தும்
*இந்த வசனத்தின் மூலம் நபிதோழர்கள் அல்லாஹ்விற்காக ஒருவருக்கொருவர் நேசித்துக் கொண்டவர்கள்* என்ற செய்தி இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மூலம் அறிய முடிகிறது [(அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ், நூல்: நஸாயீ – குப்ரா (11146)]
3) முஸ்லிம் ஒருவரின் எதிரிகளை எதிர்க்கும் விகிதம் ஆரம்பத்தில் எவ்வாறு இருந்தது, பின்னர் அதில் எந்த மாற்றம் செய்யப்பட்டது? எதனால்?
ஆரம்பத்தில் *ஒரு முஸ்லிம் 10 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது* (8:65). பின்னர் அல்லாஹ் இதை குறைத்து, *ஒரு முஸ்லிம் இரண்டு எதிரிகளை* எதிர்கொள்ளும் அளவிற்கு மாற்றினான் (8:66). இது *முஸ்லிம்களின் பலவீனத்தை* கருத்தில் கொண்டு இலகுவாக்கப்பட்டது.
4) இந்த (8:70) வசனத்தில் போரில் பிணை கைதியாக இருந்தவர்களுக்கு என்ன நற்செய்தி கூறுமாறு நபி அவர்களிடம் அல்லாஹ் கட்டளையிடுகிறான்? இது எந்த சஹாபி விஷயத்தில் இறக்கப்பட்டது?
இது பத்ர் போரில் கைது செய்யப்பட்ட *அப்பாஸ்* (ரலி) விஷயத்தில் இறக்கப்பட்டது. [(அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி – அவ்ஸத் (8107)]
_______________________
Jazakallahu Haira جزاك اللهُ خيرًا”