*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 82* ||

1 ) *போரில் புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு என்ன தண்டனை?*

\\*அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாவார்கள்*, இறுதியாக செல்லும் இடம் நரகமாகும்.*\\

(8:16) அவர் *அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளாகி விட்டார்*. அவரது தங்குமிடம் நரகமாகும். சேருமிடத்தில் அது கெட்டது.

*பெரும் பாவங்களில் ஒன்று*

நூல்கள்: புகாரி (2766), முஸ்லிம் (145)

2 ) *அவ்வாறு போரில் புறமுதுகு காட்டி  ஓடினால் அதற்குரிய நிபந்தனை* என்ன?

*பதுங்கித் தாக்குபவராக, மற்றொரு அணியுடன் சேர்ந்து கொள்பவராக*

Or

*போரிட இடம் மாறுபவராக, படையுடன் சேர்ந்து கொள்பவராக*

Or

*போருக்காக(ப் பின்சென்று தாக்குவதன் நிமித்தம்) ஒதுங்கக் கூடியவரையும்,  (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளக்கூடியவரையும்* (8:16)

3 ) உஹுதுப் போரின் போது *பாதங்களை உறுதிப்படுத்த, ஷைத்தானின் அசுத்தத்தை நீக்க, உள்ளங்கள் வலுப்பெற* அல்லாஹ் செய்தது என்ன?

\\*சிறு தூக்கத்தின் மூலம் மன அமைதி, வானிலிருந்து இறங்கிய இலேசான மழை*\\

(8:11) (நீங்கள்) *நிம்மதி பெறுவதற்காகத் தன்னிடமிருந்து சிறு தூக்கத்தை* உங்களுக்கு அவன் தழுவச் செய்ததை நினைத்துப் பாருங்கள்! மேலும் அவன் *வானிலிருந்து உங்கள்மீது மழை பொழியச் செய்தான்*. அதன்மூலம் உங்களைத் தூய்மைப்படுத்தவும், ஷைத்தானின் அசுத்தத்தை உங்களை விட்டு நீக்கவும், உங்கள் உள்ளங்களை வலுப்படுத்தவும், அதன்மூலம் பாதங்களை உறுதிப்படுத்தவும் (இவ்வாறு செய்தான்.)

4 ) இறைமறுப்பாளர்களுக்கு எது *சிறிதளவும் உதவாது/காப்பாற்றாது* or *எத்தகைய பலனும் அளிக்காது*?

\\*போரில் இறைமறுப்பாளர்களின் படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும்*\\

(8:19) நீங்கள் (போருக்குத்) திரும்பினால் நாமும் திரும்புவோம். *உங்கள் படை அதிகமாக இருந்தாலும் அது உங்களைச் சிறிதும் காப்பாற்றாது*. இறைநம்பிக்கையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.

______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *