*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 81* ||

அத்தியாயம் *8 [அல்அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள்)* வசனம் *1- 10* வரை]

1 ) *இறைநம்பிக்கையாளர்கள் எத்தகையோர்?*

//*அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்போது, அவர்களுடைய உள்ளங்கள் அஞ்சி நடுங்கும்*

*அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை அதிகமாகிவிடும்*

மேலும், அவர்கள் *தங்களுடைய இறைவனையே முழுவதும் சார்ந்திருப்பார்கள்*

*தொழுகையை நிலைநிறுத்துவார்கள், நல்வழியில் செலவு செய்வார்கள்*

*அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு*\\ (8:2~4)

2 ) பத்ர போரில் வெற்றி பெற *இறை உதவி வேண்டி நபிகளார் செய்த பிரார்த்தனையை* எழுதுக?

*இறைவா! நீ எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக.*

*இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக!*

*இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்து விட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்க மாட்டார்கள்*

என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டேயிருந்தார்கள்

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்கள்: முஸ்லிம்(3621), திர்மிதீ(3006), அஹ்மத்(203)

3 ) நபிகளாரிடம் *போரில் கிடைத்த வெற்றி பொருள்களிருந்து தனக்கு அன்பளிப்பு* செய்யும்படி கேட்ட நபி தோழர் யார்?

\\*ஸஅத் பின் அபீ வக்காஸ்* (ரலி)\\

*என் விஷயத்தில் நான்கு இறைவசனங்கள்* அருளப்பட்டன. நான் (குமுஸ் நிதியிலிருந்து) வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, *அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அன்பளிப்பாகத் தாருங்கள்* என்று கேட்டேன். நபியவர்கள் *அதை வைத்துவிடு*” என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி),

நூல்: முஸ்லிம் (3597), திர்மிதீ (3004), அபூதாவுத் (2361), அஹ்மத் (1456)

_______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *