*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 77* ||
அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *171- 180* வரை]
1 ) *அல்லாஹ்வுக்கு எத்தனை திருப்பெயர்கள் உள்ளன*?
*\\தொண்ணூற்றொன்பது* (99) திருப்பெயர்கள் உள்ளன.\\
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக, *தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள்* உள்ளன. அவற்றை *அறிந்து (அதன் மீது நம்பிக்கை) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.*
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (2736), முஸ்லிம் (5199)
2 ) *இறைச்செய்தியை பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம்* என்ன?
\\*அவனுக்குரிய உதாரணம் நாயாகும்*\\
(7:176) அவனுக்கு எடுத்துக்காட்டு, *ஒரு நாயைப் போன்றது*. நீர் அதனை விரட்டினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டுவிட்டாலும் *நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. இதுவே நமது வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கு எடுத்துக்காட்டாகும்*.
3 ) *மனிதர்கள் எந்த விதத்தில் கால்நடைகளை விட மோசமானவர்கள்*?
\\மனிதர்களுக்கும் & ஜின்களுக்கும் *உள்ளம், கண்கள், காதுகள் ஆகிய உணர்வு உறுப்புகள் இருந்தும்* அவற்றை சரியாக பயன்படுத்தாமல் அலட்சியம் செய்வதால் *கால்நடைகளை விட மோசமானவர்களாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.*\\
(7:179) ஜின்கள் மற்றும் மனிதர்களில் அதிகமானோரை நரகத்திற்காகவே படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் கேட்க மாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள். அவ்வாறல்ல! (அவற்றைவிட) அவர்கள் வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*