*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 64* ||

அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *31- 40* வரை]

1 ) *நரகத்தில் இருமடங்கு வேதனையை* யாருக்கு கொடுக்க வேண்டுமென வேண்டுவார்கள்?

\\*தங்களை வழிகெடுத்த முன் சென்றவர்களைச் சுட்டிக்காட்டி*\\

(7:38) எங்கள் இறைவனே! *இவர்கள்தான் எங்களை வழிகெடுத்தார்கள். அவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையைக் கொடுப்பாயாக!* என்று அவர்களிலுள்ள பிந்தியவர்கள் கூறுவார்கள்.

2 ) *நரகில் நுழையும் போது கூட்டத்தினர்* என்ன செய்வார்கள்?

(7:38) ஒவ்வொரு கூட்டத்தினரும் நுழையும்போது தமது *சக கூட்டத்தினரை சபிப்பார்கள்.*

3 ) *அல்லாஹ் யாரை நேசிக்க மாட்டான்*?

*\\வீண் விரயம் செய்வோரை*\\

(7:31) உண்ணுங்கள்! பருகுங்கள்! விரயம் செய்யாதீர்கள்! *விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்*.!

4 ) *தன் தோழர்களிடையே எத்தனை நயவஞ்சகர்கள்* இருப்பதாக நபிகளார் கூறினார்கள்?

*என் தோழர்களிடையே பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள்*. அவர்களில் எட்டுப் பேர், ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். நரக நெருப்பின் ஒரு தீப்பந்தமே அவர்கள் எட்டுப் பேருக்கும் போதுமானதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்: அம்மார் (ரலி), நூல்: முஸ்லிம் (5361)

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *