*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 62* ||

அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *11- 20* வரை]

1 ) ஆதம் நபிக்கும் அவரது மனைவிக்கும் *சைத்தான் எதற்காக தீய எண்ணத்தை* ஏற்படுத்தினான்?

(7:20) *அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்கு வெளிப்படையாக்குவதற்காக* அவர்களிடம் கெட்ட எண்ணத்தை ஷைத்தான் ஏற்படுத்தினான்

2 ) ஆதம் நபிக்கு *பணிய மறுத்த இப்லீஸ்*,  அதற்கு கூறிய காரணம் என்ன?

(7:12) நான் அவரைவிட(ஆதம் நபியைவிட) மேலானவன். *என்னை நெருப்பால் படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்* என்று (இப்லீஸ்) கூறினான்.

3 ) *மூமின்களை வழிகெடுப்பதே இப்லீசின்  முக்கிய இலக்காக* கூறப்படும் வசனம் எது?

(7:16,17)  *அவர்களுக்காக உனது நேரான வழியில் உட்கார்ந்து கொள்வேன். பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்* (என்றும் கூறினான்).

4 ) ஆதம் நபிக்கும் அவரது மனைவிக்கும் *சொர்க்கத்தில் இடப்பட்ட கட்டளை* என்ன?

(7:19) நீங்கள் சொர்க்கத்தில் வசித்து, விரும்பியதை உண்ணலாம். ஆனால், *இந்த மரத்தை நெருங்கக்கூடாது*. (மீறினால்) அது *உங்களை அநியாயக்காரர்களாக* ஆக்கும்

5 ) *இப்லீசால் வழிகெடுக்கப்பட்டவர்களின் மறுமை நிலை* என்ன?

\\*நரகில் தள்ளப்படுவார்கள்*\\

7:18 அவர்களில் உன்னைப்(இப்லீஷை) பின்பற்றுவோரையும், (அவர்களுடன்) உங்கள் அனைவரையும் கொண்டு *நரகத்தை நிரப்புவேன்* என்று (இறைவன்) கூறினான்.

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *