*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 59* ||

அத்தியாயம் 6 [*அல்அன்ஆம் (கால்நடைகள்*), வசனம் 151- 160 வரை]

1 ) *இதைவிட அல்லாஹ்வுக்குக்கு மிகவும் விருப்பமானது வேறேதுமில்லை?* அது என்ன?

*அல்லாஹ்விற்கு தன்னைப் புகழ்வதைவிட* மிகவும் பிரியமானது எதுவுமில்லை.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்கள்: புகாரி (4634), முஸ்லிம் (5326)

2 ) *நாம் நற்செயல் செய்ய உள்ளத்தில் எண்ணினால் அதற்கு எத்தனை நன்மை?*

என் அடியான் ஒரு நற்செயல் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு *ஒரு நன்மை* செய்ததாகப் பதிவு செய்யுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: திர்மிதீ (2999)

3 ) *நாம் தீமையைச் செய்ய எண்ணி அதை கைவிட்டால் அது குற்றமாக கருதப்படுமா?*

என் அடியான் அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணி அதைச் செய்யவில்லை என்றால், அதைக் *குற்றமாகப் பதிவு வேண்டாம்*.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: திர்மிதீ (2999)

4 ) *நன்மை செய்பவர்களுக்கு எத்தனை மடங்கு கூலி கிடைக்கும்?*

யார் நன்மை செய்கிறாரோ அவருக்கு *அதுபோல் பத்து மடங்கு* (கூலி) உண்டு

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: திர்மிதீ (2999)

5 ) எந்த நிகழ்விற்கு பின் *ஒரு மனிதன் கொள்ளும் இறைநம்பிக்கை* ஏற்கப்படாது?

*சூரியன் (மேற்கில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது கொள்ளும் இறைநம்பிக்கை அது எந்த மனிதருக்கும் பயனளிக்காது*

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (4636), முஸ்லிம் (248)

*மேற்கிலிருந்து உதயமாகும்போது மக்கள் அனைவரும் (அதைப் பார்த்துவிட்டு) ஒட்டுமொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால் அவரது இறைநம்பிக்கை பயனளிக்காது*.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம் (248), திர்மிதீ (2998), அஹ்மத் (936)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு (யுக முடிவுக்கு) முன் யார் பாவ மன்னிப்புக் கோரித் திருந்தி விடுகிறாரோ* அவருடைய பாவ மன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம் (5236), அஹ்மத் (7386)

*மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல்., தஜ்ஜால் (தோன்றுதல்), பூமியிலிருந்து வெளிப்படும் (அதிசயப்) பிராணி.*

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (249)

_______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *