*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 58* ||
அத்தியாயம் 6 [*அல்அன்ஆம் (கால்நடைகள்*), வசனம் 140- 150 வரை]
1 ) *அல்லாஹ்வின் தண்டனை யாரை விட்டும் நீக்கப்படாது?*
(6:147) *குற்றம் புரியும் கூட்டத்தாரை விட்டும் அவனது தண்டனை திருப்பப்படாது*
2 ) *விதியின் பெயரால் இறைமறுப்பாளர்கள் தங்களின் இறைமறுப்பிற்கு* கூறும் காரணம் என்ன?
(6:148) *அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்கள் முன்னோர்களும் இணைகற்பித்திருக்க மாட்டோம்*.
3 ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் *யாரை அல்லாஹ்வின் கருணையிலிருந்து அப்புறப்படுத்துமாறு கோரிக்கை வைத்தார்கள்*? அதன் *காரணத்தையும் குறிப்பிடுக?*
*அல்லாஹ், யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக*!
*அல்லாஹ், யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்*.
*அல்லாஹ் எதனைத் தடை செய்திருக்கின்றானோ அதன் விலையையும் (அதை விற்றுப் பணம் பெறுவதையும்) தடை செய்து விட்டான்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அஹ்மத் (2546)
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*