*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 57* ||
அத்தியாயம் 6 [*அல்அன்ஆம் (கால்நடைகள்*), வசனம் 131- 140 வரை]
1 ) *ஊர்மக்கள் கவனமற்ற நிலையில் அநியாயம் செய்யும் போது அல்லாஹ் நபிமார்களை அனுப்பாமல் அழித்திருக்கின்றனா?* (ஆதாரம்)
b) *இல்லை*
[ஒரு சமுதாயத்தை அழிப்பதற்கு முன்பு எச்சரிக்கை செய்யும் தூதரை அல்லாஹ் அனுப்பாமல் இருந்ததில்லை….]
(6:131) ஊரார் கவனமின்றி இருக்கும் நிலையில் (அவர்கள் செய்த) அநியாயத்தின் காரணமாக *அவ்வூராரை உமது இறைவன் அழிப்பதில்லை என்பதே இ(றைத் தூதர்களை அனுப்புவ)தற்குக் காரணம்.*
2 ) *அநியாயக்காரர்களுக்கு மறுமையின் முடிவு எவ்வாறு இருக்கும்?*
[*பாதகமாக இருக்கும் அவர்கள் மறுமையில் வெற்றி பெற மாட்டார்கள்*]
(6:135) எனது சமுதாயமே! உங்கள் நிலைப்பாட்டின்படி நீங்கள் செயல்படுங்கள்! நானும் செயல்படுகிறேன். *மறுமையின் முடிவு யாருக்குச் சாதகமாக அமையும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்* என்று கூறுவீராக!
3 ) *அன்றைய காட்டுமிராண்டி அரபுகளின் மூடச் செயல்கள் சிலவற்றை குறிப்பிடுக!*
(6:140) *அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தல்*
*அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொள்ளல்*,
(6:139) *கால்நடைகளின் வயிற்றிலிருப்பவை ஆண்களுக்கு மட்டும் சொந்தமானவை. பெண்களுக்கு தடுக்கப்பட்டு என்றும். ஆனால் இறந்து பிறக்கும் போது இருபாலருக்கும் பங்குண்டு* என்றும் கூறுதல்
(6:138) அவர்கள் தம் கால்நடைகளை & பயிர்களை குறிப்பிட்டு *இவை தடை செய்யப்பட்டவையாகும் தாங்கள் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) இதை உண்ண முடியாது* எனவும்..
*சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது* எனவும்,
*சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம்* எனவும் மீது இட்டுக்கட்டிக் கூறி வந்தனர்.
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*