*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 56* ||

அத்தியாயம் 6 [*அல்அன்ஆம் (கால்நடைகள்*), வசனம் 121- 130 வரை]

1 ) *ஜின் இனத்திற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர் என்பதை பரைசாற்றும் குர்ஆன் வசனம் எது?*

(6:130) *ஜின், மனிதக் கூட்டத்தாரே! எனது வசனங்களை உங்களுக்கு எடுத்துரைக்கும் தூதர்கள் உங்களிடமிருந்தே உங்களுக்கு வரவில்லையா? உங்களுடைய இந்த நாளின் சந்திப்பைப் பற்றி அவர்கள் உங்களை எச்சரிக்கவில்லையா*?” (என்று இறைவன் கேட்பான்.)

2 ) *அல்லாஹ் யாருடைய உள்ளத்தை இஸ்லாத்தின் பக்கம் செல்ல விரிவாக்குகிறான்*?

(6:125) *யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட நாடுகிறானோ* அவரது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகிறான்.

3 ) *இறைமறுப்பாளர்களின் செயல்களை சைத்தான் அழகாக காட்டுவதாக* கூறும் குர்ஆன் வசனம் எது?

*இறைமறுப்பாளர்களின் தீயச் செயலை சைத்தான் அவர்களுக்கு அழகாக காட்டி அதில் நிலைத்திருக்க செய்கிறான்* என்பதை அல்லாஹ் பின் வரும் வசனத்தில் *ஒளி/இருள்* சமமாகாது என்ற உதாரணம் மூலம் விளக்குகிறான்

6:122 இறந்தவனை உயிர்ப்பித்து, மக்களிடையே நடந்து செல்வதற்காக அவனுக்கு ஒளியையும் ஏற்படுத்தினோமே அவன், இருள்களில் கிடந்து அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளவனைப் போல் ஆவானா? *இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன*.

_____________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *