*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 55* ||
[அத்தியாயம் 6 *அல்அன்ஆம்* (கால்நடைகள்), வசனங்கள் *111- 120* வரை]
1 ) இறைவனின் வார்த்தை எதை கொண்டு முழுமையாகியுள்ளது?
உமது இறைவனின் வாக்கு *உண்மையாலும்,நீதியாலும்* முழுமையாகி விட்டது. (6:115)
2 ) *செயல்களின் தீமையை அறிந்து கொள்ள* நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு விளக்கினார்கள்?
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை *தீமை* பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், *நன்மை என்பது நற்பண்பாகும்*.
*தீமை என்பது, எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுகிறதோ, அதை மக்கள் தெரிந்து கொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்* என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி),
நூல்கள்: முஸ்லிம் (4992), திர்மிதீ (2311) அஹ்மத் (16973)
3 ) *அதிகமானோர் என்பதற்க்காக பின்பற்றுதல் கூடாது* என கூறும் வசனம் எது?
*பூமியில் இருப்பவர்களில் பெரும்பான்மையினருக்கு நீர் கட்டுப்பட்டால் அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழிகெடுத்து விடுவார்கள்*. அவர்கள் ஊகத்தைத் தவிர எதையும் பின்பற்றவில்லை. அவர்கள் கற்பனை செய்வோர் தவிர வேறில்லை. ( 6:116)
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*