*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 54* ||
[அத்தியாயம் 6 *அல்அன்ஆம்* (கால்நடைகள்), வசனங்கள் *101- 111* வரை]
1 ) *அல்லாஹ்வுக்கு நிகராக எதை வணங்குகிறார்களோ* அவைகளை ஏசக்கூடாது? ( ஆதாரம்)
(6:108) *அல்லாஹ்வையன்றி அவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்களைத் திட்டாதீர்கள்! இதனால் அவர்கள் அறிவின்றி, பகைமையால் அல்லாஹ்வைத் திட்டுவார்கள்*.
2 ) *ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய மூன்று விசயங்கள் என்ன?*
A ) *யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்* என்று கூறுகின்றாரோ அவர் *அல்லாஹ்வின்மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டி* விட்டார்”
B) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் *இறைவேதத்திலிருந்து எதையும் மறைத்தார்கள்* என்று யாரேனும் கூறினால், அவரும் *அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யைக் இட்டுக்கட்டி* விட்டார்.
C) *நபி (ஸல்) அவர்கள் நாளை நடக்கவிருப்பதைத் தெரிவிப்பார்கள்* என்று யாரேனும் கூறினால் அவர் அல்லாஹ்வின்மீது மிகப்பெரும் பொய்யைப் புனைந்து விட்டார்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்கள்: முஸ்லிம் (287), திர்மிதீ (2994), அஹ்மத்(23094)
3 ) *உள்ளங்கள் இஸ்லாத்தில் நிலைபெற நபி ஸல் கேட்ட துஆ என்ன*?
اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
*உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!.*
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி),
நூல்கள்: முஸ்லிம் (5161)
*மற்றொரு துஆ*
يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ
*உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக*! ( திர்மதி2140)
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*