*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 53* ||

[அத்தியாயம் 6 *அல்அன்ஆம்* (கால்நடைகள்), வசனங்கள் *81- 90* வரை]

1 ) *யாருக்கு பாதுகாப்பு உண்டு*?

*இறைநம்பிக்கை கொண்டு, தனது இறைநம்பிக்கையுடன் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தைக் கலந்து விடாமல் இருப்போருக்கே பாதுகாப்பு உண்டு*. அவர்களே நேர்வழி அடைந்தவர்கள். (6:82)

2 ) நமக்கான மூன்று செல்வங்கள் எது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடியான், ‘*என் செல்வம்; என் செல்வம்*’ என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். *அவன் உண்டு கழித்ததும், உடுத்திக் கிழித்ததும், கொடுத்துச் சேமித்துக் கொண்டதும்* தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்லக்கூடியவையும் ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம் (5666), அஹ்மத் (8457)

3 ) உம்முல் குரா ( *أُمَّ ٱلْقُرَىٰ*) என்பது எதை குறிக்கும்?

*உம்மு* – தாய்

*குரா- நகரம் , கிராமம் ,ஊர்*,

ஊர்களின் தாய் *மக்காவை* குறிக்கும்.

இது வேதம். *ஊர்களின் தாயா(ன மக்காவில் வசிப்போ)ரையும்*, அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காக இதை நாம் அருளினோம். (6:92)

4 ) *6:91 வது வசனத்திற்க்கான  விளக்கம்* புகாரி 7414, 7415 ல் உள்ளது அவை என்ன?

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஒரு யூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, *முஹம்மதே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒரு விரலின் மீதும் பூமிகளை ஒரு விரலின் மீதும் மலைகளை ஒரு விரலின் மீதும் மரத்தை ஒரு விரலின் மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் நிறுத்திக்கொண்டு, ‘நானே அரசன்*’ என்று கூறுவான்” என்று சொன்னார்.

(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியச் சிரித்துவிட்டு, “*அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை*” எனும் (யூதர்களைப் பற்றிய 6:91ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “*இந்த யூதரின் சொல்லைக் கேட்டு வியப்படைந்து, அதை உறுதிப்படுத்தும் வகையில் சிரித்தார்கள்*”.

____________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *