*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 50* ||
[அத்தியாயம் 6 *அல்அன்ஆம்* (கால்நடைகள்), வசனங்கள் *41- 60* வரை]
1 ) *தூதர்கள் எதற்காகக் அனுப்படுகிறார்கள்?*
தூதர்களை *நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிப்போராகவுமே* நாம் அனுப்புகின்றோம்( 6:48 )
2 ) *மறைவான ஞானம் அல்லாஹ்வுடைய தூதர்க்கு இல்லை* என கூறும் வசனம் எது?
(நபியே!) *என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருப்பதாக நான் உங்களிடம் கூற மாட்டேன். மறைவானதை நான் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர எதையும் நான் பின்பற்றுவதில்லை* என்று கூறுவீராக! (6:50)
3 ) *மறைவானவற்றின் திறவுகோல்கள் எத்தனை* அவைகள் என்ன ?
*மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்*.
*அவை*
A)உலகம் அழியும் நேரத்தைப் பற்றிய அறிவு,
B) மழையைப் பொழிவை பற்றிய அறிவு,
C) கருவறைகளில் உள்ளவற்றை அறிகிறான்.
D) நாம் நாளை எதைச் சம்பாதிக்கப் போகிறோம் என்பதை பற்றிய அறிவு,
E) நாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பதையும் (அல்லாஹ்வே அறிவான்)எவரும் அறிய மாட்டார்.
புகாரி (4627), அஹ்மத் (4536)
4 ) *நமது உயிரை இரவில் மரணிக்க செய்யும் அல்லாஹ் எதற்க்காக திருப்பி தறுகிறான்?*
*குறிப்பிட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக* (6:60)
5 ) அதிகாரம் (* ٱلْحُكْمُ*) அனைத்தும் அல்லாஹ்விடமே உள்ளது(ஆதாரம் வசன எண்?)
*அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர வேறில்லை*. (6:57)
_______________________[
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*