*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 48* ||
[அத்தியாயம் 5 (*அல்மாயிதா* – உணவு தட்டு) வசனம் *111-120* வரை]
1) *மகத்தான வெற்றியாக அல்லாஹ்* எதை சொல்கிறான்?
*நாம் அல்லாஹ்வை பொருந்தி கொள்ள வேண்டும் , அல்லாஹ்வும் நம்மை பொருந்தி கொள்ள வேண்டும்* ( ஆதாரம் 5:119)
2) ஜிப்ரீல் அவர்கள் *நபி (ஸல்) அவர்களிடம் சமுதாயம் பற்றி* என்ன கூறினார்கள்?
உம் சமுதாயத்தார் தொடர்பாக *உம்மைத் திருப்தியடையச் செய்வோம்; உம்மைக் கவலையடையச் செய்ய மாட்டோம்* அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (346)
3) *ஹவாரிய்யூன்கள்* யார்?
ஈஸா நபியின்….., *நெருங்கிய நண்பர்கள்/அந்தரங்க தோழர்கள்/சிஷ்யர்கள்/ சீடர்கள்* ( 5:111)
4) *மறுமை நாளில் முதலாவதாக ஆடை* அணிவிக்கப்படுபவர் யார்?
*இப்ராஹீம்* (அலை) அவர்கள்
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி (3447), முஸ்லிம் (5493)
5) ஈஸா நபியிடம் *மாயிதாவை* (உணவுத் தட்டை)எதற்க்காக கேட்டார்கள்?
*அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண்மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, அதற்குச் சாட்சியாளர்களாக ஆவதற்கு* [5:113]
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*