*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 39* ||

[அத்தியாயம் 5 (அல்மாயிதா – உணவு தட்டு) வசனம் 21-30 வரை]

1) நபி (ஸல்) *குஃப்ர்(இறைநிராகரிப்பு*) என எதை கூறினார்கள்?

நபி (ஸல்) அவர்கள், iஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவர்கள் இருவரும் போரிடுவது (கொலை செய்வது) இறைமறுப்பாகும்* என்று கூறினார்கள்.

புகாரி (48), முஸ்லிம் (116)

2) *அல்லாஹ் விதித்த பூமியில் நுழைவதற்க்கு அந்த மக்களுக்கு எது தடையாக இருந்தது?*

*மிகவும் வலிமை வாய்ந்த அடக்குமுறை செய்யும் கூட்டத்தினர் அங்கு இருந்ததால்* தடையாக இருந்தது. (5:22)

3) *அல்லாஹ் யாருடைய செய்தியை ( நபா)மேற்கூறிய வசனங்களில் சொல்ல சொல்கிறான்.*?

*நபி ஆதம் (அலை) அவர்களின் இருபுதல்வர்களின் உண்மை வரலாற்று செய்தியை* சொல்ல சொல்கிறான். (5:27)

4)* யாரை போருக்கு அழைத்து செல்ல தூதரிடம் அந்த மக்கள் கூறினார்கள்*?

*அல்லாஹ்வை அழைத்து போர் செய்ய சொன்னார்கள்*

(5:24) 

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *