*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
||கேள்வி 36||
(அத்தியாயம் 4 அந்நிஸா வசனம் 171-176 வரை)
1) *கலாலா (பாகப்பிரிவினை) சட்டம் யாருக்குறியது*?
*தாய்-தகப்பன் / பாட்டன்-பாட்டி ஆகிய தலை வாரிசுகளோ, மகன்-மகள் / பேரன்-பேத்தி ஆகிய கிளை வாரிசுகளோ இல்லாமல் இறந்தவரின் சொத்துகள், ‘கலாலா சொத்துகள்*’ எனப்படும்.
2) *நபி (ஸல்) தன்னை எவ்வாறு அழைக்க சொன்னார்கள்*? ( ஹதிஸ்)
*அல்லாஹ்வின் அடியார்* என்றும், ‘*அல்லாஹ்வின் தூதர்*’ என்றும் சொல்லுங்கள் (புகாரி (3445), அஹ்மத் (149)
3) கலாலா சட்டபடி மரணித்த ஒரு பெண் விட்டு சென்றதில் அவளுடைய சகோதரனுக்கு என்ன பங்கு?
*அவர் வாரிசாவான்* (முழு பங்கும் அவருக்கு)(4:176)
*இந்த வசனத்தில் சொல்லப்ட்ட மற்ற பங்கு*
*மரணித்தவர் ஆணாக இருந்தால் அவருக்கு ஒரு சகோதரி இருந்தால் பாதி பங்கு*. ( 1/2)
*இரண்டு சகோதரிகள் இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு* ( 2/3)
*உடன்பிறந்தோரில் ஆண்களும் பெண்களும் இருந்தால், இரண்டு பெண்களின் பங்கைப் போன்றது ஓர் ஆணுக்குக் கிடைக்கும்*. ஆணுக்கு( 2/3) பெண்க்கு(1/3)
_______________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*