*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 22* ||

[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *31-40* வரை)]

1)எதிலிருந்து விலகிக் கொண்டால் *நமது தீமைகளை அல்லாஹ் அழித்து விடுவதாக* கூறுகிறான்

2) *யார் சைத்தானின் கூட்டாளி?*

3) *யார் யார்கெல்லாம் நன்மை செய்யுமாறு* அல்லாஹ் ஏவுகிறான்?

______________________

1. *தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்துக் கொண்டால்*

*உங்களுக்குத் தடுக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால் உங்கள் தீமைகளை உங்களிடமிருந்து அழித்து விடுவோம்*(4:31).

நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், *அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, கொலை செய்வது, பொய் சாட்சி சொல்வது* ஆகியன (பெரும் பாவங்களாகும்)

…..மற்றொரு அறிவிப்பில் *சூனியம் செய்வதும், வட்டி உண்பதும், அநாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு* என்று கூறினார்கள். (முஸ்லிம் 144, புகாரி – 2766)

_______________________

2. எவர்கள் *மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ*

*அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பாமல் மக்களுக்குக் காட்டுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுகின்றனர்*. யாருக்கு ஷைத்தான் தோழனாக இருக்கிறானோ அவனே கெட்ட தோழன்.(4:38)

_______________________

3. *பெற்றோர், உறவினர், அநாதைகள், ஏழைகள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், உடன் இருக்கும் நண்பர்கள், வழிப்போக்கர், உங்கள் அடிமைகள்* ஆகியோருக்கு நன்மை செய்யுங்கள்!(4:36)

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *