*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 19* ||

[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *1-10* வரை)]

1. *பெரும் பாவங்களில் ஒன்றாக* எதனை அல்லாஹ்வின் தூதர் எச்சரித்தார்கள்?

2. *எதிலிருந்து?* அவர்களாக எதையேனும் *மனமார விட்டுத் தந்தால்* அதைப் ஆண் பெற்று கொள்வதில் தவறில்லை?

3. *காப்பாளர் (அநாதைகளின் பொறுப்பாளர்) நேர்மையாக நடக்க* அல்லாஹ் கூறும் அறிவுரை என்ன? 

4. *காப்பாளர் எப்போது அநாதைகளிடம் சொத்தை ஒப்படைக்க வேண்டும்?*

5. எது *அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்ட பங்கீடு?*

_________________________

1. *அநாதைகளின் செல்வத்தை உண்பது(பயன்படுத்துதல்)* (முஸ்லீம் 145)

அவர்களின்(அநாதைகளின்) செல்வங்களை உங்கள் செல்வங்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள்! *அது பெரும் பாவமாக உள்ளது.* (4:2)

______________________

2. திருமணக்கொடை *(மஹர்)

பெண்களுக்கு அவர்களின் திருமணக்கொடைகளை மனப்பூர்வமாகக் கொடுங்கள்! *அதிலிருந்து அவர்கள் மனமுவந்து எதையேனும் உங்களுக்குத் தந்தால் அதைத் திருப்தியுடனும் மகிழ்வுடனும் உண்ணுங்கள்*! (4:4)

______________________

3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் *நீங்கள் நியாயமாக நடக்க முடியாது* என்று பயந்தீர்களானால்..,

அநாதைப் பெண்கள் (திருமண) விஷயத்தில் நீங்கள் நேர்மையாக நடக்க முடியாது என்று பயந்தால் மற்ற *பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ திருமணம் செய்து கொள்ளுங்கள்!*

(அவர்களுக்கிடையே) *நீதியாக நடக்கமுடியாது என்று பயந்தால்* ஒரு பெண்ணோ அல்லது அடிமைப் பெண்ணோ போதும். நீங்கள் நீதி தவறாமல் இருக்க இதுவே மிக நெருக்கமானது.4:3

______________________

4. (அநாதைகள்) தங்கள் சொத்தை *நிர்வகிக்கக்கூடிய அறிவாற்றலை* அவர்களிடம் நீங்கள் காணும்போது 

அநாதைகளைப் பரிசோதித்து வாருங்கள்! அவர்கள் திருமணப் பருவத்தை அடைந்து, *அவர்களிடம் நீங்கள் பக்குவத்தைக் கண்டால்*, அவர்களின் *செல்வங்களை அவர்களிடமே ஒப்படைத்துவிடுங்கள்*! (4:6)

______________________

1. பெற்றோரும் உறவினரும் விட்டுச் சென்றதில் ஆண்களுக்குப் பங்குண்டு. மேலும், பெற்றோரும் உறவினரும் விட்டுச் சென்றதில் *பெண்களுக்கும் பங்குண்டு*. அது குறைவாக இருந்தாலும் சரி! கூடுதலாக இருந்தாலும் சரி! *இது கடமையாக்கப்பட்ட பங்கீடாகும்.* (4:7)

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *