*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 18* ||

[ஆலு இம்ரான்

(அத்தியாயம் *3* வசனங்கள் *191-200* வரை)]

1. 3:192. *நீ யாரை நரகத்தில் நுழையச் செய்கிறாயோ அவரை இழிவுபடுத்தி விட்டாய்.* என்ற குர்ஆன் வசனத்திற்கு ஒரு நபித்தோழர் *நரக வேதனையிலிருந்து சிலர் வெளியேறுவார்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி* என்று நபிகளார் கூறிய விளக்கத்தை 

நினைவுப்படுத்துவார்கள். அந்த நபித்தோழர் யார்? & அவர்கள் கொடுத்த *விளக்கம் என்ன*?

———————————

2. அல்லாஹ்வை நினைவு கூர்ந்து *இறை நம்பிக்கையாளர்கள் பிரார்த்திக்கும் பிரார்த்தனைகள்* என்னென்ன?

———————————

*1). ஜாபிர் (ரலி) அவர்கள்*

*………முஹம்மத் (ஸல்) அவர்களின் உயர் தகுதியைப் பற்றி அதாவது நபியவர்களை அல்லாஹ் (*மகாமு மஹ்மூத்* எனும் *உயர் இடத்திற்கு அனுப்புவானே அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?* என்று கேட்டார்கள். நான் *ஆம்* என்றேன். அப்போது அவர்கள், அந்த *மகாமு மஹ்மூத்* எனும் உயர் இடத்திலிருந்து கொண்டுதான் நபி (ஸல்) அவர்களின் மூலம் *அல்லாஹ் சிலரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவான்*…. *முஸ்லிம் 320*  (ஹதீஸின் சுருக்கம்)

……..ஆனால் *நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை* *முஸ்லிம் 322* (ஹதீஸின் சுருக்கம்)

________________________

3:191) *எங்கள் இறைவனே! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக*

3:192) *எங்கள் இறைவனே! நீ யாரை நரகத்தில் நுழையச் செய்கிறாயோ அவரை இழிவுபடுத்தி விட்டாய். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை.*

3:193) *எங்கள் இறைவனே! இறைநம்பிக்கை கொள்வதற்காக “உங்கள் இறைவனை நம்புங்கள்!” என்று அழைத்தவரின் அழைப்பை நாங்கள் செவியுற்றோம். எனவே இறைநம்பிக்கை கொண்டோம்*.

 *எங்கள் இறைவனே எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்களை விட்டும் எங்கள் தீமைகளை அழிப்பாயாக! எங்களை நல்லோருடன் கைப்பற்றுவாயாக!*

3:194) *எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்குத் தருவாயாக! மறுமை நாளில் எங்களை இழிவுபடுத்தி விடாதே! நீ வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டாய்!*

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *