*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 14* ||
[ஆலு இம்ரான் (அத்தியாயம் *3* வசனங்கள் *151-160* வரை)]
1) எதன் காரணமாக *மக்களிடம் நபிகளார் கனிவாக* நடந்து கொண்டார்கள்?
2) *யார் உதவி செய்தால்* நம்மை எவராலும் வெல்ல முடியாது?
3)நாம் *சேமித்து வைத்திருக்கும் செல்வங்களை* (இவ்வுலகில் பயனளிக்கும் அனைத்தும்) விட எது பெரியது?
4) உஹுதுப் போரில் *சிறுதூக்கத்தின் போது யாருடைய வாள்* பலமுறை கையிலிருந்து நழுவி விழுந்தது?
5) a) உஹுதுப் போர்க்களத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களுக்கு *நபிகளார் அவர்கள் இட்ட கட்டளை என்ன?*
b) இக்கட்டளைய அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களின் *அணியினர் எதற்காக மீறினார்கள்?*
______________________________________________
1) *அல்லாஹ்வுடைய அருளின் காரணமாக*
(நபியே!) *அல்லாஹ்வின் அருளைக் கொண்டே* நீர் அவர்களிடம் மென்மையாக நடந்துகொள்கிறீர். (3:159)
_______________________
2)*அல்லாஹ் நமக்கு உதவி செய்வானானால்*
*உங்களுக்கு அல்லாஹ் உதவினால் உங்களை வெல்பவர் யாருமில்லை*.(3:160)
_________________________
3) *அல்லாஹ்வின் பாதையில் நாம் கொல்லப்பட்டால், அல்லது இறந்துவிட்டால்* இதன் பலனாக
*அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும், அவனுடைய அன்பும்* நாம் சேகரித்து (க் குவித்து) வைத்திருக்கும் பொருள்களைவிட சிறந்ததாகும்.
*அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ அல்லது மரணித்தாலோ, அல்லாஹ்வின் மன்னிப்பும் அருளும்* அவர்கள் எதைச் சேகரித்துள்ளார்ளோ அதைவிட மிகச் சிறந்தது. (3:157)
_______________________
4) *அபூதல்ஹா(ரலி)* அவர்கள்
(புஹாரி: 4068)
_________________________
5) a) நபிகளார் (நாங்கள் போரில் கொல்லப்பட்டு) *எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இந்த இடத்தை விட்டு நகராதீர்கள்*. (புஹாரி 3039)
b) அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தடுத்தும் *கள நிலவரம் அறியாமல் அம்மக்கள் கனீமத் பொருட்களை (போர்ச்செல்வங்களை) எடுக்க சென்றுவிட்டனர்*
(புஹாரி 3039)
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*