*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 08* ||

[ஆலு இம்ரான் (அத்தியாயம் *3* வசனங்கள் *91-100* வரை)]

A) *இணைவைப்பிலிருந்து மீளாமல் அதிலேயே மரணமடைபவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை என்ன?*

B) பின் வரும் இறைச்செய்தி கிடைத்தப்பின் *அபூதல்ஹா (ரலியால்லாஹு அன்ஹு) அவர்கள் செய்த தர்மம் என்ன?* (நீங்கள் விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்.(3:92)

—————————–

A) *இணைவைப்பிலையே மரணித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை.*

*பூமி நிறைய தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அவர்களில் எவரிடமிருந்தும் அது அறவே ஏற்கப்பட மாட்டாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை* (3:91)

_____________________________

B) *தனக்கு மிகவும் விருப்பமான பைருஹா எனும் தோட்டத்தை தர்மம் செய்தார்கள்* (புஹாரி 1461)

(அல்லாஹ் ஆபூதல்ஹா அவர்களை பொருந்திக்கொள்வானாக)

நபிகளாரின் அறிவுறுத்தலின்படி

அத்தோட்டத்தை அபூ தல்ஹா (ரலி) அவர்கள் *தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்* (முஸ்லிம் -1821)

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *