*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

நாள்: *04-10-24*

|| *கேள்வி 04* ||

[ஆலு இம்ரான்

(அத்தியாயம் *3* வசனங்கள் *51-60* வரை)]

A) *ஈஸா நபியின் அற்புதப்படைப்பு எந்த நபிக்கு ஒப்பானதாக* அல்லாஹ் கூறுகிறான்?

B) ஈஸா நபி போதித்த *ஓரிறைக் கொள்கை என்ன?*

C) பின் வரும் வசனத்தில் *அல்லாஹ் செய்த சூழ்ச்சி என்ன*?

………*அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்*. அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன். 3:54

D) ஈஸா நபியின் *ஹவாரிய்யூன்* (நெருங்கிய நண்பர்கள்/அந்தரங்க தோழர்கள்) செய்த *பிரார்த்தனை* என்ன?

————————–

A) *ஆதம்* நபி (3:59)

B) *என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்தான். எனவே, அவனையே வணங்குங்கள்*. 3:51

C) *ஈஸா நபி விஷயத்தில் அல்லாஹ் செய்த சூழ்ச்சி.*

ஈஸா நபியைக் கொலை செய்ய எதிரிகள் முயற்சி செய்கின்றார்கள். *எதிரிகளின் சதியை முறியடித்து ஈஸா நபியை அல்லாஹ் வானுலகத்திற்கு உயர்த்திக் கொண்டான்.*

*ஈஸாவே! உம்மை நான் கைப்பற்றி என்னளவில் உயர்த்திக் கொள்வேன்.*(3:55)

D) *எங்கள் இறைவனே! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரையும் பின்பற்றினோம். எனவே சாட்சி கூறுவோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக*! 3:53

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *