*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 03* ||

[ஆலு இம்ரான்

(அத்தியாயம் *3* வசனங்கள் *41-50* வரை)]

A)*உலக பெண்களில் சிறந்த அந்த நால்வர் யார்?*

B)*தொட்டில் பருவத்தில் பேசிய அந்த மூவர் யார்?*

C) *ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் யாவை?*

D) *இவ்வுலகிலும், மறுமையிலும் மதிப்புமிக்கவர்; (இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவர் யார்*?

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

——————————–

A). *மர்யம்(ரலி), கதீஜா (ரலி), ஃபாத்திமா (ரலி), ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா*- (இவர்கள் மீது அல்லாஹ் சிறப்பருள் புரிவானாக)  திர்மிதி (3813)

_________________________

B)1. *ஈஸா* (அலை)

2. *ஜூரைஜ் என்ற இறைநேசர் அப்பழுகற்றவர்  என்பதை சாட்சி கூறிய ஆடு மேய்ப்பவரின் குழந்தை*

3. *இஸ்ரவேல் சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் குழந்தை* (புஹாரி 3436)

_________________________

C) களிமண்ணால் பறவை செய்து அதற்கு உயிர் அளித்தல், இறந்தவர்களை உயிர்பித்தல், பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவரையும், வெண்குஷ்ட நோயையும் குணமாக்குதல், உணவு

& வீட்டில் உள்ள இன்னபிற பொருட்களை தெரிவித்தல் ஆகியவை. (இவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே ஈஸா நபி நிகழ்த்தினார்கள்) 3:49

__________________________

D) நபி ஈஸா அவர்கள் -3:45

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *