*இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு* – 07
இமாம் நஸாயீ
முழுப்பெயர்: அஹ்மத் இப்னு ஷுஐப் இப்னு அலி இப்னு ஸினான் இப்னு பஹ்ர் இப்னு தீனார் (சுனன் நஸாயீ என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)
புனைப்பெயர்: அபூஅப்துர்ரஹ்மான் அந்நஸாயீ
இயற்பெயர்: அஹ்மத்
தந்தை பெயர்: ஷுஐப்
பிறந்த ஊர்: இவர் நஸா எனும் ஊரில் பிறந்தார்,
பிறப்பு: ஹிஜ்ரி 215
கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான், அல்ஹிஜாஸ், எகிப்து, ஷாம் இன்னும் ஜஸீரா போன்ற உலகின் பல பாகங்களுக்கும் கல்விக்காகப் பிரயாணம் செய்துள்ளார்கள்.
இவர் தொகுத்த நூல்கள்:
அஸ்ஸுனன் நஸாயீ (ஸுனன் அல்குப்ரா, ஸுனன் அஸ்ஸுக்ரா),
ஃபலாயிலுல் குர்ஆன் (குர்ஆனுடைய சிறப்புகள் தொடர்பானது),
ஜுஸ்வுன் ஃபிஹி மஜ்லிஸானி,
அஷரதுந் நிஷா,
ஃபலாயிலுஸ் ஸஹாபா (சஹாபாக்களின் சிறப்புகள் தொடர்பானது),
அல்இக்ராப், அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் (ஹதீஸ்களில் பலவீனமானவர்கள் இன்னும் விடப்பட்டவர்கள் தொடர்பானது),
அமலுல் யவ்மி வல்லைலா,
அல்குனா, அத்தஃப்ஸீர்,
தஸ்மியதுல் ஃபுகஹாயில் வல்அம்ஸாரி போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.
இவரது ஆசிரியர்கள்:
இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா, திர்மிதி, முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு உலய்யா, முஹம்மது இப்னு இஸ்மாயில் தப்ரானீ, முஹம்மது இப்னு ஹுஸைன் இப்னு இப்ராஹீமுல் ஆமிரிய்யீ, அபூதாவூத் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
இவரது மாணவர்கள்:
யஃகூப் இப்னு முபாரக், மன்சூர் இப்னு இஸ்மாயில் அல்ஃபகீஹ், முஹம்மது இப்னுல் காஸிம் இப்னு முஹம்மது இப்னுல் ஸியாருல் குர்துபீ, அபூதய்யிப் முஹம்மது இப்னு ஃபலுல் இப்னு அப்பாஸ், ஜஃபர் இப்னு முஹம்மது இப்னுல் ஹாரிஸ் அல்கஸாயீ, இஸ்ஹாக் இப்னு அப்துல்கரீமுஸ் ஸவாஃப் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.
இறப்பு: ஹிஜ்ரி 303ல் ஸஃபர் மாதம் 13ம்நாள் ஃபலஸ்தீனில் இறந்தார். அப்போது அவருக்கு 88 வயதாகும்.