*இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு* – 04
\\*இமாம் அஹ்மத்*\\
*முழுப்பெயர்* : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)
*புனைப்பெயர்* : அபூஅப்தில்லாஹ்
*இயற்பெயர்* : அஹ்மத்
*தந்தைப்பெயர்* : முஹம்மது
*பிறந்த ஊர்* : பக்தாதில் பிறந்தார்
*பிறந்த நாள்* : ஹிஜ்ரி 164ம் ஆண்டு
*கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்*: கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.
இவர் தொகுத்த *நூல்கள்*:
*முஸ்னத் அஹ்மத்*
*அஸ்ஸுஹுத்*
*ஃபலாயிலுஸ் ஸஹாபா* (ஸஹாபாக்களின் சிறப்பு)
அல்அஷ்ரிபத்
அல்இலல்
அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்
அல்மனாசிக்
கிதாபுல் ஃபிதன்
கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்
முஸ்னத் அஹ்லில் பைத்
அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)
கிதாபுத்தாரிக்
அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)
*இவரது ஆசிரியர்கள்*:
இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
*இவரது மாணவர்கள்*:
*முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ* போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.
இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும்.