*இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு* – 03
\\*இமாம் மாலிக்*\\
*முழுப்பெயர்* : மாலிக் இப்னு அனஸ் இப்னு அபீ ஆமிர் இப்னு அம்ரில் அஸ்பஹானீ அல்ஹுமய்ரீக் (அல்முஅத்தா என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)
*புனைப்பெயர்* : அபு அப்துல்லாஹ் அல்மதனீ
*இயற்பெயர்* : மாலிக்
*தந்தைப்பெயர்* : அனஸ்
*பிறந்த ஊர்* : அஸ்பஹானீ என்ற ஊரில் பிறந்தார். இவர் அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர்.
*பிறப்பு* : ஹிஜ்ரி 93
கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:
இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயத்தை அறிந்து இருந்ததால் பல ஊர்களுக்கு பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படவில்லை. ஒரு தடவை மட்டும் மக்காவிற்கு ஹஜ் செய்வதற்காகச் சென்றுள்ளார். என்றாலும் மார்க்கச் சட்டங்களை நன்கு அறிந்தவாராக இருந்தார். இவர் 21வது வயதில், தான் படித்ததைப் பிறருக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
இவர் தொகுத்த நூல்கள் :
புகாரி, முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பாகவே இவர் எழுதிய *அல்முஅத்தா* என்ற நூல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அனைத்து இமாம்களும் அதன் பக்கமே சார்ந்து இருந்தனர்.
ரிஸாலதுன்ஃபில் கத்ர்
ரிஸாலதுன் ஃபின் நஜ்ம்
ரிஸாலதுன் ஃபில் அக்லியா
ரிஸாலதுன் இலா அபிஹஸ்ஸான்
ரிஸாலதுன் இலல் லைஸ்
கிதாபுஸ் ஸிர்
இன்னும் பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.
*இவரது ஆசிரியர்கள்:*
சியாத் இப்னு ஸஅத், ஸைது இப்னு அஸ்லம், ஸைது இப்னு அபீஉனைஸ், ஸைது இப்னு ரிபாஹ், சாலிம் அபிநல்ர், அப்துல்லாஹ் இப்னு தீனார், மூஸா இப்னு உக்பா, ஆயிஷா பின்த் ஸஅத் இப்னு அபிவகாஸ், ஹிஷாம் இப்னு உர்வா போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
*இவரது மாணவர்கள்:*
இமாம் மாலிக் அவர்களுக்கு உலகின் அனைத்து பாகங்களிருந்தும் மாணவர்கள் அதிகமானார்கள். ஹிஜாஸ், யமன், குராஸான், ஷாம், மிஸ்ர், அன்தலூஸ் போன்ற பகுதிகளில் இவருக்கு அதிகமான மாணவர்கள் உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க சிலர்:
இப்ராஹீம் இப்னு தஹான், இஸ்மாயீல் இப்னு உலய்யா, சுஃப்யான் இப்னு உயைனா, அப்துல்லாஹ் இப்னு வஹாப், அபூஅலீ அல்ஹனஃபீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.
இறப்பு: ஹிஜ்ரி 179, ரபிவுல்அவ்வல் மாதம் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அப்போது அவருக்கு 86 வயதாகும்.