துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளல்
மறுமையை நம்புவோர் துன்பத்தின் போது துவண்டு விடாமல் பொறுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மார்க்கம் வழிகாட்டுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தனது கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி); ஆதாரம்: புஹாரி 1281
இறந்துபோனவர் பெயரில் ஆறாவது நாள், ஒன்பதாம் நாள், பதினாறாவது நாள், நாற்பதாம் நாள், நினைவு நாள் என்றெல்லாம் மார்க்கம் கூறாத சடங்குகளைச் செய்பவர்கள் இனியாவது சிந்திக்கட்டும். மறுமையை நம்பும் மக்கள் மார்க்கம் வழிகாட்டும் வகையில் மட்டுமே துக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.