*ஆசிரியர் தினம் & சிறுவர் தினம் போன்ற நவீன கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?*
*இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களைத் தடைசெய்கின்றது.*
மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகக் கருதி வந்தனர். இதைக் கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளாக ஆக்கிக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) *அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களுக்கும் என்ன சிறப்பு என்று நபிகள் நாயகம் அவர்கள் (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம்* என்று மக்கள் கூறினார்கள்.
*அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும், நோன்புப் பெருநாளுமாகும்* என்று கூறினார்கள்.
நூல் : *அபூதாவூத் 959*
எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் சிந்தித்தால் அல்லாஹ் முஸ்லிம்களின் கொண்டாட்டத்திற்காக ஏற்படுத்தியிருப்பது இரு நாட்களே!
*இதனை விட வேறு நாட்களை ஒரு முஸ்லிம் கொண்டாட முடியாது என்பதோடு, அப்படி நாட்களை உருவாக்கினால் அது இறை அதிகாரத்தில் கை வைப்பதாக அமைவதோடு, வேறு யாரும் உறுவாக்கியதை நடைமுறைப்படுத்தினால் அது பித்அத்தாகவும், மாற்றுமதக் கலாச்சாரத்தை பின்பற்றியதாகவும் அமைந்துவிடும்* என்பதை கீழ்கானும் ஹதீஸில் தெளிவாகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
*(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.*
அறிவிப்பவர் : *இப்னு உமர்* (ரலி) நூல் : *அபூதாவுத்* (3512)
இன்று நடைமுறையிலுள்ள எந்த தினத்தை அதன் உருவாக்க நோக்கங்களின் அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் *அதனைப் பற்றி இஸ்லாம் கூடும் என்ற அடிப்படையிலோ, கூடாது* என்ற அடிப்படையிலோ, உரிமை சார்ந்ததாக இருப்பின் அந்த உரிமை சம்பந்தமாக 1434 வருடங்களுக்கு முன்னாலே பேசிவிட்டது.
*உதாரணமாக சிறுவர் தினம், முதியோர் தினம், தொழிலாளர் தினம், பெண்கள் தினம்* இதுபோன்றவைகளின் நோக்கமான உரிமைகளை இஸ்லாம் எப்போதோ கூறிவிட்டது.
மேலும் தனிமனித ஞாபகார்த்த தினங்கள்( *திருமன நாள், பிறந்த நாள்*) போன்றவைகளும் தடுக்கப்பட்டதாகும்.
*الله اعلم*