மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை?

ஆயிரம் மடங்கு சிறந்தது.

மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

அற்விப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 1190

இந்தப் பள்ளியில் தொழுவது அதிக நன்மையைப் பெற்றுத்தரும் என்ற கருத்தில் இதை சொர்க்கத்தின் பூஞ்சோலை என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரி (ரலி); நூல் : முஸ்லிம் 2687

மஸ்ஜிதுந் நபவீ சிறப்புக்குரிய பள்ளியாக இருப்பதால் அதிக நன்மையை நாடி இந்தப் பள்ளிக்கு பயணம் புறப்பட்டு வரலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எந்தப் பள்ளிவாசலுக்கும் சிரத்தை எடுத்து பயணம் மேற்கொள்ளக் கூடாது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி); நூல் : புகாரி 1189

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *