தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டுமா?
நபி (ஸல்) அவர்கள் தங்களின் இஹ்ராம் எல்லையான துல் ஹுலைஃபாவுக்கு வந்த பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இஹ்ராம் எல்லைக்கு வந்தவுடன் நிய்யத் சொல்லி, தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா?
துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும்.
யலம்லம் வழியாகவோ, மற்ற மீகாத்-எல்லை வழியாகவோ செல்பவருக்கு பொருந்தாது.
நபி (ஸல்) அவர்கள் தமது எல்லையான துல்ஹுலைபாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுததற்குக் காரணம், அவர்களுக்கு இவ்வாறு தொழ வேண்டும் என்ற உத்தரவு வந்தது.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனது இறைவனிடமிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து “இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!” எனக் கட்டளையிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூற நான் கேட்டேன்.
நூல்: புகாரி 1534
இதன்படி துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும்.