ஹோட்டல் மக்கா எல்லைக்குள் இருந்தால் எங்கு குளிப்பது?
மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பது சுன்னத் எனும்போது, நம்முடைய ஹோட்டல் மக்கா எல்லைக்குள் இருந்தால், ஹோட்டலில் குளித்துவிட்டு ஹரமுக்கு வரலாமா? மக்காவுக்கு வெளியில் குளித்துவிட்டு வருவது மட்டும்தான் சுன்னத்தா?
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிஉ,; நூல்: புகாரி 1573
இந்த ஹதீஸ், மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் குளிப்பார்கள் என்று தெரிவிக்கின்றது. மக்கா எல்லைக்குள் தான் தங்குமிடம் அமைகின்றது என்றால் வந்த பின் குளித்துக் கொள்ளலாம்.