மனிதர்களில் சிறந்தவர்கள்- நற்காரியங்களைச் செய்பவர்கள்
அனைத்து விதமான அருட்கொடைகளையும், வாய்ப்புகளையும் மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அளிக்கவில்லை. மாறாக, அவன் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் கொடுத்து இருக்கிறான். இந்நிலையில், ஏக இறைவன் நமக்குக் கொடுத்திருப்பதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, நற்காரியங்களைச் செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இறைவனை நம்பிக்கை கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், அவனது பாதையில் அதிகம் அதிகமாக நல்ல அமல்களைச் செய்வதன் மூலம், மனிதர்களிலேயே சிறந்தவர்கள் என்ற உயர்வான, உன்னதமான நிலையை அடைந்து கொள்ள இயலும்.
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
(திருக்குர்ஆன் 98 : 6,7)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி), நூல் : திர்மிதீ-2329 (2251), அஹ்மத் (19519)