இணை கற்பிக்கும் காரியங்கள், இறந்தவர்கள் செவியேற்பார்களா?, இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன் 35:22)

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! (அல்குர்ஆன் 27:80)

இறந்தவர்கள் பிரார்த்தனைக்கு பதிலளிப்பார்களா?

பின்வரும் வசனங்கள் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் செவியேற்க மாட்டார்கள் என்று தெளிவாக எடுத்துரைக்கிறது. அவனே அல்லாஹ்; உங்கள் இறை வன். அவனுக்கே அதிகாரம்.அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (அல்குர்ஆன் 35:13,14)

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (அல்குர்ஆன் 7:194)

கப்ரை கட்டுவது, பூசுவது கூடாது!

கப்ருகளின் மீது கட்டம் கட்டுவது தொடர்பாகவும், சமாதிகளை வணங்குமிடங்களாக எடுத்துக் கொள்வது தொடர்பாகவும் நபியவர்கள் செய்த எச்சரிக்கைகள் என்ன?

நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ர­லி) நூல்: முஸ்லி­ம் (1610)

அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்கள் : அ­(ர­) அவர்கள், என்னிடம், நபி (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்த சிலையையும் அதனை அழிக்காமலும் உயர்த்தப்பட்ட எந்தக் கப்ரையும் அதனைத் தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே! என்று கூறினார்கள்.

நூல் : முஸ்­லிம் (1609)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.

அறிவிப்பவர் : ஃபழாலா பின் உபைத் (ரலி­) நூல் : அஹ்மது : (22834)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : யூத, கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக எடுத்துக் கொண்டனர்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி) நூல் : புகாரீ (1330)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் சமாதிகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டார்கள். நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன்.

அறிவிப்பவர் : ஜுன்துப் (ரலி­) நூல் : முஸ்­லிம் (827)

அறிந்து கொள்ளுங்கள், மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டவர்கள்தான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஉபைதா(ரலி­) நூல் அஹ்மத் (1599)

தாயத்து , தாவீஸ் போன்றவற்றை அணிவது கூடுமா?

நமக்கு எந்த ஒரு துன்பம் ஏற்பட்டாலும் நாம் அல்லாஹ்விடம்தான் உதவி தேட வேண்டும். தாயத்து, தாவீஸ் அணிவதினால் நமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புவது அலலாஹ்விற்கு இணைகற்பித்தல் ஆகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தாயத்தைத் தொங்கவிடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர்(ரலி­) நூல் : அஹ்மத் (16781)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தாயத்தைத் தொங்கவிடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்கமாட்டான். யார் சிப்பியை தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்றமாட்டான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர்(ரலி­) நூல் : அஹ்மத் (16763)

இம்ரான் பின் ஹுஸைன்(ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர் வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் இதை கழற்றி விடு. இது உனக்கு பலஹீனத்தைத்தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெறமாட்டாய் என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (19149)

தாயத்து, தாவீசுகளைக் கட்டுதல், தட்டுகளில் எழுதிக் கரைத்துக் குடித்தல், வீடுகளில் வெள்ளைக்கல்லை தொங்கவிடுவது, சிறிய பாட்டில்களையும் பூசணிக்காய், உருவப்பொம்மைகள் போன்றவற்றை தொங்கவிடுவதும் இணைவைப்புக் காரியங்களாகும். இவற்றைத் தவிர்ந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இறைவனல்லாதவர்களை அவனுக்கு நிகராக வரம்பு மீறி புகழ்வது கூடுமா?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : கிறிஸ்தவர்கள், மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான்தான். அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி­) நூல் : புகாரீ (3445)

இன்று முஸ்­ம்கள் பரவலாக ஓதக்கூடிய சுப்ஹான மவ்­து, முகைதீன் மவ்­து, புர்தா, சாகுல் ஹமீது மவ்­து போன்ற எந்த மவ்­தாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்களையும் மற்றவர்களையும் இறைவனுடைய ஆற்றல் அளவிற்கு வரம்பு மீறிப் புகழ்ந்த வரிகள் அதில் நிறைந்துள்ளன.

உதாரணத்திற்கு,

أَنْتَ غَفَّارُ الْخَطَايَا

நீங்கள்தான் எங்கள் பாவங்களை மன்னிக்கக்கூடியவர்.

أَنْتَ سَتَّارُ الْمَسَاوِىْ

எங்களுடைய தீமைகளை மறைக்கக்கூடியவரும் நீங்கள்தான்

இதுபோன்ற இணைவைப்பு வரிகள் மவ்­துகளில் வருகின்றன. இவற்றைச் சாதாரணமாகப் படிப்பது கூட தவறாகும்.

ஜோசியம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல், குறிப்பார்த்தல் போன்ற காரியங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

நமக்கு நாளை என்ன நடக்கும் என்ற மறைவான விசயங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். ஜோசியக்காரர்கள், குறிகாரர்கள் நமக்கு நாளை நடக்கவிருப்பது நல்லதா? கெட்டதா? என்பதை அறிவார்கள் என்று நம்புவது இணைவைத்தலாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்துவிட்டான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர­லி); நூல் : அஹ்மத் (9171)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பாளர் : ஸஃபிய்யா நூல் : முஸ்லி­ம் (4137)

பரவலாக முஸ்­ம்களுக்கு மத்தியில் பால்கிதாப் பார்த்தல் என்ற ஒரு நடைமுறை காணப்படுகிறது. இதுவும் ஜோதிடத்தில் சேர்ந்ததுதான். எனவே, பால்கிதாப் பார்ப்பதும் இணைவைப்புக் காரியமேயாகும்.

நல்ல நேரம் கெட்ட நேரம் சகுணம் பார்ப்பது கூடுமா?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : தொற்றுநோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. பீடை மாதமும் கிடையாது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர­லி) நூல் : புகாரீ (5757)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : சகுனம் பார்ப்பது இணைகற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊது(ர­லி) நூல் : அபூதாவூத் (3411)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.

அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ரலி­) நூல் : அஹ்மத் (6748)

இன்றைக்கு அதிகமான முஸ்­ம் மக்களின் திருமணம், பயணம், மேலும் பல காரியங்களுக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தே நடக்கின்றனர்.அதே போன்று விதவைப் பெண், பூனை குறுக்கே வருவதும் கெட்ட சகுனம் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர். இது போன்ற நம்பிக்கைகள் அனைத்துமே இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்கள் ஆகும்

சூனியத்தின் மூலம் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியுமா?

அல்லாஹ்வின் விருப்பம் இன்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது. (அல்குர்ஆன் 2:102)

சூனியம் என்ற வித்தை மூலம் பார தூரமானக் காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர்.

இருப்பதை இல்லாமல் ஆக்கவோ; இல்லாததை உருவாக்கவோ; ஒன்றை வேறொன்றாக மாற்றவோ; எந்த வித்தையும் கிடையாது.

தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். அவ்வளவு தான்! இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்து பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.

”நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தை களைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (அல்குர்ஆன் 7:116)

இவ்வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

”இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது (அல்குர்ஆன் 20:66)

இவ்வசனத்தில் பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.

மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும்.

இதி­ருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும்.

சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படுத்தமுடியும் என்று நம்புவது இணைவைத்தலாகுமா?

எவ்வித புறசாதனங்களும் இல்லாமல் ஒருவனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும். சூனியம் செய்பவர்கள் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்று நம்பினால் அது அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் பாவமாகும்.

சூனியம் செய்பவன் நான் எவ்வித புறசாதனங்களும் இல்லாமல் அல்லாஹ்வைப் போன்று பாதிப்பு ஏற்படுத்துவேன் என்று தன்னை இறைவனுக்கு நிகராகக் கருதுவதால்

அழித்துவிடும் ஏழு பாவங்களில் நபி(ஸல்) அவர்கள் சூனியத்தையும் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : புகாரீ (2767)

நபியவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டார்களா?

”சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்றும் அநீதி இழைத்தோர் கூறுகின்றனர்.(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.

(அல்குர்ஆன் 25:8, 9)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் வைக்கப்பட்டவர்கள் என்று காஃபிர்கள்தான் கூறினார்கள். அவ்வாறு கூறிய காஃபிர்களை அல்லாஹ் வழிகெட்டவர்கள் என்றும் அவர்கள் நேர்வழி பெறாதவர்கள் என்றும் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் வைக்கப்பட்டவர்கள் என்று முஃமின்கள் கூறுவது கூடாது. நபியவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று நம்புவதும், அது தொடர்பாக வரும் ஹதீசும் திருமறைக்குர்ஆனிற்கு எதிரானதாகும்.

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது கூடுமா?

அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்வது இணைகற்பிக்கும் காரியம் ஆகும். எனவே அவ்வாறு செய்வது கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி­) நூல் : புகாரீ (2679)

ஒரு மனிதர் ”கஅபாவின் மீது சத்தியமாக” என்று சத்தியம் செய்வதை இப்னு உமர் (ர­) அவர்கள் செவியேற்றார்கள். அப்போது ”யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்விற்கு இணைகற்பித்து விட்டார்” என்று நபியவர்களிடமிருந்து நான் செவியேற்றிருக்கிறேன் என்று அவருக்கு கூறினார்கள்.

நூல்:நஸாயீ (2829)

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்தவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

அறியாமல் முஸ்­ம் அல்லாதவர்கள் கடவுளாகக் கருதுபவற்றின் மீதோ, அல்லது அல்லாஹ் அல்லாதவர்களின் மீதோ சத்தியம் செய்தவர்கள் ”லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று கூற வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சத்தியம் செய்யும் போது லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்!

அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ர­) நூல் :புகாரி (4860)

சிறிய இணைவைத்தல் என்றால் என்ன?

சிறிய இணைவைத்தல் என்பது முகஸ்துதி ஆகும். அதாவது நம்முடைய நல்லறங்கள் இறைவனுடைய திருமுகத்தை மட்டும் நாடிச் செய்யாமல் மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ செய்வதாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களிடம் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைத்தலைத்தான் என்று கூறினார்கள். நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள் முகஸ்துதி என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (22528)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார், பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார்.

நூல் : அஹ்மத் (16517)

காலத்தைத் திட்டுவது கூடுமா?

நமக்கு ஏற்படும் இன்ப, துன்பங்கள் அனைத்தும் இறைவனுடைய நாட்டப்படியே ஏற்படுகிறது.

”அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. (அல்குர்ஆன் 9:51)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:யா அல்லாஹ் நீ கொடுத்ததை தடுப்பவன் யாருமில்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் யாருமில்லை.

நூல்:புகாரி (844)

எனவே நமக்கு துன்பங்கள் ஏற்படும் போது காலத்தை திட்டுவது அல்லாஹ்வை திட்டுவதாகும்.

அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதின் (மூலம்) எனக்குத் துன்பம் தருகிறான். நான்தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில்தான் அதிகாரம் உள்ளது. நான்தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ர­) நூல் : புகாரீ (4826)

பீடை மாதம் என்று உண்டா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: புகாரி 5757

பரக்கத் தேடுவதற்கான அளவுகோல் என்ன?

பரக்கத் என்றால் மறைமுக அருள் என்று பொருளாகும். அதாவது அல்லாஹ் நாம் அறியாத விதத்தில் நமக்குச் செய்கின்ற அருள்ஆகும்.

ஸஹர் உணவில் பரக்கத் இருப்பதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள். இது போன்று

எந்த இடங்களில், எந்தச் செயல்களில் பரக்கத் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறதோ அவற்றைத் தவிர மற்றவற்றில் பரக்கத் இருப்பதாகக் கருதினால் அது அல்லாஹ்விற்கு இணைகற்பித்தல் ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தைக் கடந்து சென்றனர். அம்மரம் இணை கற்பிக்கும் மக்களுக்கு உரியது. ”தாத்து அன்வாத்’என்று அழைக்கப்படும் அம்மரத்தில் இணை கற்பிப்பவர்கள் தமது ஆயுதங்களைத் தொங்கவிடுவார்கள். இதைக் கண்ட சில நபித்தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கு ”தாத்து அன்வாத்’ எனும் புனித மரம் இருப்பது போல் எங்களுக்கும் புனித மரம் ஒன்றை ஏற்படுத்துங்கள்” என்று கேட்டனர்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ் தூயவன். ”அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக’ என்று மூஸா நபியின் சமுதாயத்தினர் கேட்டது போல் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது. எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக, உங்களுக்கு முன் சென்றோரின் வழிமுறையை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள்” என்று கூறினார்கள்.

(நூல்: திர்மிதீ 2106)

ஒரு மரத்தில் மறைமுகமான அருள் இருப்பதாக நினைப்பதை நபியவர்கள் சிலைவழிபாட்டிற்குச் சமமாக கருதியுள்ளார்கள்.

கந்தூரி விழாக்கள், பஞ்சா, சந்தனக்கூடு, மீலாது விழா,புத்தாண்டு கொண்டாடுதல், தா­, பால் கிதாபு, இறந்தோருக்கு 3, 7, 40 நாட்களில் சடங்குகள் செய்தல், ஷைகுமார்களின் கா­ல் விழுதல் போன்றவற்றைச் செய்பவர்கள், மூஸா நபியிடம் பல கடவுள்களைக் கேட்ட இஸ்ரவேலர்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை இந்த ஹதீஸின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

இறைவனல்லாதவர்களுக்கு வழிபாடு செய்வதைப் போன்று தோற்றம் ஏற்படும் இடங்களில் இறைவனுக்குரிய வழிபாடுகளைச் செய்யலாமா?

‘புவானா என்ற இடத்தில் அறுத்துப் ப­யிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்’ என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். ‘அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் இல்லை’ என்றார். ‘இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது இல்லை’ என்றார். ‘அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ர­லி) நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர். எனவே இறைவனல்லாதவர்களுக்கு வழிபாடு செய்வதைப் போன்று தோற்றம் ஏற்படும் இடங்களில் இறைவனுக்குரிய வழிபாடுகளைச் செய்வது கூடாது.

எழுந்து நின்று மரியாதை செய்வது கூடுமா?

எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.

. ‘தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ர­) நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ர­) நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

இறைவனுக்கு இணைகற்பிக்கும் பெயர்களைச் சூட்டுவது கூடுமா?

இன்றைக்குச் சிலர் ஷாஜஹான் (உலகத்தின் அரசன்) , ஷாகுல் ஹமீது (புகழுக்குரியவனுக்கு அரசன்) என்பது போன்ற பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு இறைவனுக்கு இணைகற்பிக்கும் வகையிலான எந்தப் பெயர்களையும் சூட்டிக் கொள்வது கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் ”மன்னாதி மன்னன்’ (ம­க்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி­) நூல்:முஸ்­லிம் (4338)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *