*கடன் தொல்லையிலிருந்து பாதுகாப்பு பெற கேட்க வேண்டிய துஆ*

❌ *பலவீனமானச் செய்தி* ❌

—————————————————————-

1973. அலீ (ரலி) அவர்களிடம், முகாதப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஒருவர் வந்து, நான் உரிமைபெற செலுத்தும் கடன்தொகையை செலுத்தமுடியாமல் ஆகிவிட்டேன். எனக்கு உதவி செய்யுங்கள்! என்று கூறினார்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள், எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத்தந்த சில வார்த்தைகளை உனக்கு கற்றுத்தருகிறேன். (அதனை நீ அல்லாஹ்விடம் கேட்டால்) தய்யி கூட்டத்தின் மலையளவு கடன் இருந்தாலும் அந்தக்கடனை அல்லாஹ் நீக்குவான் என்று கூறிவிட்டு,

‎*اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ*

*அல்லாஹ்ஹும்மஹ்ஃபினி பிஹலாலிக அன் ஹராமிக அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக்.*

பொருள் : *யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமானாதாக்கியதை கொண்டும் எனக்கு போதுமானதாக ஆக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக.*

நூல் : *திர்மிதி 3563*

————————————————-

அல்லாஹும் மக்ஃபினீ பி ஹலாலிக்க அன் ஹராமிக்க, வ அஃக்னினீ பி ஃபள்லிக்க அம்மன் ஸிவாக்க என்பதைக் கூறு என்று கூறினார்கள்.

பொருள் : யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக

அறிவிப்பவர்: அபூவாயில் (ரஹ்)

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ عِصْمَةَ بْنِ إِبْرَاهِيمَ، ثنا أَبِي، ثنا يَحْيَى بْنُ يَحْيَى، أَنْبَأَ أَبُو مُعَاوِيَةُ، ثنا *عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ الْقُرَشِيُّ، عَنْ سَيَّارٍ أَبِي الْحَكَمِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ:

جَاءَ رَجُلٌ إِلَى عَلِيٍّ، فَقَالَ: أَعِنِّي فِي مُكَاتَبَتِي، فَقَالَ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلِ صَبِيرٍ دَيْنًا لَأَدَّاهُ اللَّهُ عَنْكَ قُلْ: «اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ»

هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ *அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக்* பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *