விவாகரத்துச் செய்யாமல் இருக்க விரும்பிய போது இறங்கிய வசனம்
4601 ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால், கணவன்-மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேது மில்லை எனும் (4:128ஆவது) வசனம் குறித்துக் கூறுகையில்,
தம்மிடம் இருந்துவரும் மனைவியுடன் முறையாக இல்லறம் நடத்த விரும்பாத ஓர் ஆண் அவளைப் பிரிந்து விட விரும்புகிறான். (இந்நிலையில் கணவனிடம்) அவள் எனது (செலவுத் தொகை உள்ளிட்ட) உரிமையை உனக்கு நான் விட்டுக் கொடுத்து விடுகிறேன்; (என்னை விவாகரத்துச் செய்து விடாமல் தொடர்ந்து மனைவியாகவே இருக்க அனுமதிக்கவேண்டும்) என்று கோருகிறாள். இது தொடர்பாகவே இவ்வசனம் (4:128) இறங்கிற்று என்று குறிப்பிட்டார்கள்.