தவறுக்கு பரிகாரம் கேட்ட போது இறங்கிய வசனம்
இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்.
ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டு விட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைக் கூறினார். அப்போது ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள்.
திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கிறவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்’ எனும் (திருக்குர்ஆன் 11:114 வது) இறைவசனம் அருளப்பட்டது.
அந்த மனிதர், ‘இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்’ என்று பதிலளித்தார்கள்.
(புகாரி 4687)