1. *உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது* என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்❓
*அல்லாஹ்வை நினைவு கூறுவதன்* முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.
(அல்குர்ஆன் 13:28)
2. * உறுதிமிக்க காரியங்களில் ஒன்று* என குர்ஆன் எதைக் கூறுகிறது❓
*யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ* (அல்குர்ஆன் 42:43)
3. *இறைவன் என்னோடு இருக்கிறான்* என்று கூறிய நபி யார்❓
*மூஸா* அலைஹிலாம் (அல்குர்ஆன் 26:62)
4. *அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்* என்று கூறிய நபி யார்❓
*முஹம்மது நபி* ஸல்லல்லாஹு அலைஹிஸலாம் (அல்குர்ஆன் 9:40)
5. *வானவர்களுக்கு சிறகுகள் உண்டா*❓
*வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு சிறகுகளைக்* கொண்ட தூதர்களாக அனுப்புவான். (அல்குர்ஆன் 35:1)
6. *ஏழு இரவுகள் எட்டு பகல்களும் தொடர்ந்தார்போல் எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது❓*
*ஆது சமூகத்தாருக்கு.* (அல்குர்ஆன் 69:6,7)