நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா❓
அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய பரிந்துரை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியின் விளக்கம் என்ன❓
இறைவா மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை செய்யும் முறை பரவலாக முஸ்லிம்களிடம் உள்ளது.
மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை பெரும் பாக்கியவான்களுக்குத் தான் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
ஆனால் நபிமொழிகளை ஆராயும் போது இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது என்பதையும் மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரும் பாவிகளுக்கே பரிந்துரை செய்வார்கள் என்பதையும் அறியலாம். பின்வரும் செய்திகள் இதைத் தெளிவாக அறிவிக்கின்றன.
حدثنا العباس العنبري حدثنا عبد الرزاق عن معمر عن ثابت عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي قال أبو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه وفي الباب عن جابر – ترمذي 2359
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எனது சமுதாயத்தில் பெரும்பாவம் புரிந்தவர்களுக்கே எனது பரிந்துரை உண்டு.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
நூல் : திர்மிதீ (2359)
4301 حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ أَسَدٍ حَدَّثَنَا أَبُو بَدْرٍ حَدَّثَنَا زِيَادُ بْنُ خَيْثَمَةَ عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُيِّرْتُ بَيْنَ الشَّفَاعَةِ وَبَيْنَ أَنْ يَدْخُلَ نِصْفُ أُمَّتِي الْجَنَّةَ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ لِأَنَّهَا أَعَمُّ وَأَكْفَى أَتُرَوْنَهَا لِلْمُتَّقِينَ لَا وَلَكِنَّهَا لِلْمُذْنِبِينَ الْخَطَّائِينَ الْمُتَلَوِّثِينَ رواه إبن ماجه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
எனது சமுதாயத்தில் பாதி நபர்களை சொர்க்கத்தில் நுழைவிப்பது அல்லது பரிந்துரை செய்வது (இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும்) தேர்வு செய்யும் உரிமை எனக்கு (இறைவனால்) வழங்கப்பட்டது. நான் பரிந்துரை செய்வதைத் தேர்வு செய்தேன். ஏனென்றால் அது தான் நிறைவானதாகவும் விசாலமானதாகவும் உள்ளது. அந்தப் பரிந்துரை இறையச்சமுள்ளவர்களுக்கு என நீங்கள் கருதுகிறீர்களா? இல்லை நிச்சயமாக அது பாவக்கறை படிந்த பாவிகளுக்கே உரியது.
அறிவிப்பவர் : அபூ மூசா (ரலி)
நூல் : இப்னு மாஜா (4301)
மறுமையில் உயர்ந்த தகுதியைப் பெற்றவர்கள் யாருடைய பரிந்துரையும் இல்லாமல் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள். ஆனால் நரகவாசிகள் பிறருடைய பரிந்துரை மூலம் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பின்வரும் செய்தி இதைத் தெளிவுபடுத்துகின்றது.
حدثني عبيد الله بن سعيد وإسحق بن منصور كلاهما عن روح قال عبيد الله حدثنا روح بن عبادة القيسي حدثنا ابن جريج قال أخبرني أبو الزبير أنه سمع جابر بن عبد الله يسأل عن الورود فقال نجيء نحن يوم القيامة عن كذا وكذا انظر أي ذلك فوق الناس قال فتدعى الأمم بأوثانها وما كانت تعبد الأول فالأول ثم يأتينا ربنا بعد ذلك فيقول من تنظرون فيقولون ننظر ربنا فيقول أنا ربكم فيقولون حتى ننظر إليك فيتجلى لهم يضحك قال فينطلق بهم ويتبعونه ويعطى كل إنسان منهم منافق أو مؤمن نورا ثم يتبعونه وعلى جسر جهنم كلاليب وحسك تأخذ من شاء الله ثم يطفأ نور المنافقين ثم ينجو المؤمنون فتنجو أول زمرة وجوههم كالقمر ليلة البدر سبعون ألفا لا يحاسبون ثم الذين يلونهم كأضوإ نجم في السماء ثم كذلك ثم تحل الشفاعة ويشفعون حتى يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزن شعيرة فيجعلون بفناء الجنة ويجعل أهل الجنة يرشون عليهم الماء حتى ينبتوا نبات الشيء في السيل ويذهب حراقه ثم يسأل حتى تجعل له الدنيا وعشرة أمثالها معها – مسلم 278
நம்பிக்கையாளர்கள் மட்டும் (அந்தப் பாலத்தைக் கடந்து) தப்பிச் செல்வார்கள். (அவர்களில்) தப்பிச் செல்லும் முதல் கூட்டத்தாரின் முகங்கள் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும்; அவர்கள் எழுபதாயிரம் பேர் இருப்பர்; அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்து வரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).
பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறி எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை உள்ளதோ அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) பரிந்துரைப்பார்கள். அ(ப்போது நரகத்திலிருந்து வெளியேற்றப்படுப)வர்கள் சொர்க்கத்தின் முற்றத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள் மீது சொர்க்கவாசிகள் (ஜீவ) நீரைத் தெளிப்பார்கள். முடிவில் வெள்ளத்தில் வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுவார்கள். அத்தகையவர் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்துவிடும். பிறகு அவர் தமக்கு இந்த உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில் தமக்குரியதாக) ஆக்கப்படும்வரை வேண்டிக் கொண்டேயிருப்பார்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (316)
நல்லவர்கள் அனைவரும் சொர்க்கம் சென்ற பிறகு தான் நரகத்தில் உள்ளவர்களுக்காக பரிந்துரை நடைபெறும் என இந்தச் செய்தி தெளிவாக்க் கூறுகின்றது.
சிறிய அளவு ஈமான் உள்ளவர்களுக்குத் தான் மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை தேவைப்படும். உயர்ந்த நிலையை அடைந்தவர்களுக்கு இந்தப் பரிந்துரை தேவைப்படாது. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.
حدثنا يوسف بن راشد حدثنا أحمد بن عبد الله حدثنا أبو بكر بن عياش عن حميد قال سمعت أنسا رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا كان يوم القيامة شفعت فقلت يا رب أدخل الجنة من كان في قلبه خردلة فيدخلون ثم أقول أدخل الجنة من كان في قلبه أدنى شيء فقال أنس كأني أنظر إلى أصابع رسول الله صلى الله عليه وسلم – البخاري 7509
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மறுமைநாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் “என் இறைவா! எவரது உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக!” என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் “எவரது உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக” என்று மீண்டும் பிரார்த்திப்பேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (7509)
—————
ஏகத்துவம்