ஒரு அத்தியாயத்தை எல்லா ரக்அத்களிலும் ஓதுதல் நபி (ஸல்) அவர்கள்சுப்ஹுத் தொழுகையில் இதா ஸுல்ஸிலத்தில் அர்லு ‘ என்று தொடங்கும் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்களிலும் ஓதினார்கள்.
நூல்: அபூதாவூத் 693
வரிசை மாற்றி ஓதுதல்
துணை அத்தியாயங்களை ஓதும் போது குர்ஆனில் உள்ளவரிசைப்படி ஓத வேண்டும் என்பது அவசியமில்லை. வரிசை மாற்றியும் ஓதலாம்.
உதாரணமாக 114 வது அத்தியாயமாக உள்ள நாஸ் அத்தியாயத்தை ஓதிவிட்டு 113
வது அத்தியாயமாக உள்ள ஃபலக் என்ற அத்தியாயத்தை ஓதலாம் .
ஒரு நாள் இரவுநபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது முதலில் (இரண்டாவது
அத்தியாயமான) ஸூரத்துல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (நான்காவது
அத்தியாயமான) ஸூரத்துந் நிஸாவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (மூன்றாவது
அத்தியாயமான) ஸூரத்து ஆலஇம்ரானை ஓத ஆரம்பித்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 1291
ஒரு அத்தியாயத்தைப்பிரித்து ஓதுதல் துணை சூரா ஓதும் போது ஒரு அத்தியாயத்தைப் பகுதி
பகுதியாகப் பிரித்து ஓதுவதும் கூடும் .
நபி (ஸல்) அவர்கள் மஃரிப்தொழுகையில் ஸூரத்துல் அஃராஃப் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்துகளில்பிரித்து ஓதினார்கள் .
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 981
الله اعلم