*சொர்க்கவாசிகள்*
——————————
*இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு.*
*அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். கட்டில்களில் ஒருவரையொருவர் எதிர் நோக்குவார்கள்.*
*மது ஊற்றிலிருந்து (நிரப்பப்பட்ட) குவளைகள் அவர்களைச் சுற்றி வரும். அது வெண்மையானதும், அருந்துவோருக்கு இன்பம் அளிப்பதுமாகும். அதில் எந்தக் கேடும் இல்லை. அவர்கள் மதி மயக்கப்படவும் மாட்டார்கள்.*
*அவர்களுடன் தாழ்ந்த பார்வையுடைய கண்ணழகிகள் மறைத்து வைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இருப்பார்கள்.*
அவர்களில் ஒருவர் மற்றவரை விசாரித்துக் கொள்வார்கள். *எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?*
என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார்.
*நீங்கள் (அவனை) எட்டிப் பார்க்கிறீர்களா* என்று (இறைவன்) கேட்பான். *அவர் எட்டிப் பார்க்கும்போது அவனை நரகின் மத்தியில் காண்பார்.*
*”அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னைக் குழியில் தள்ள முயன்றாய்”* என்று அவர் (நரகவாசியிடம்) கூறுவார். *எனது இறைவனின் அருட்கொடை இல்லாதிருந்தால் (நரகத்திற்கு) கொண்டு வரப்பட்டோரில் நானும் ஆகியிருப்பேன்*.
[அல்குர்ஆன் *37:41-57]*