கடமையான தொழுகையை வாகனத்தில் அமர்ந்தவாறு தொழலாமா….?

கடைமையான தொழுகைககளை வாகனத்தில் அமர்ந்தவாறு தொழக்கூடாது…நபி(ஸல்) அவர்கள் உபரித்தொழுகைககளை வாகனத்தில் அமர்ந்தவாறு தொழுதிருக்கிறார்கள்…ஆனால் கடமையான தொழுகைகளைத்தொழும்போது வாகனத்திலிருந்து இறங்கிவிடுவார்கள்…

ﻛَﺎﻥَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ اﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ §ﻳُﺴَﺒِّﺢُ ﻋَﻠَﻰ اﻟﺮَّاﺣِﻠَﺔِ ﻗِﺒَﻞَ ﺃَﻱِّ ﻭَﺟْﻪٍ ﺗَﻮَﺟَّﻪَ، ﻭَﻳُﻮﺗِﺮُ ﻋَﻠَﻴْﻬَﺎ، ﻏَﻴْﺮَ ﺃَﻧَّﻪُ ﻻَ ﻳُﺼَﻠِّﻲ ﻋَﻠَﻴْﻬَﺎ اﻟْﻤَﻜْﺘُﻮﺑَﺔ

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் இருந்தவாறு கூடுதல் (நஃபில்) தொழுகைகளைத் தொழுவார்கள்; அப்போது அவர்கள் எத்திசையை முன்னோக்கியிருப்பினும் சரியே! (அவ்வாறே) வாகனத்தில் இருந்தவாறு வித்ரும் தொழுவார்கள். ஆனால், கடமையான (ஃபர்ள்) தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள். (இறங்கித்தான் தொழுவார்கள்). இதை சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்(1257)

ﺃَﻥَّ اﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ اﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻛَﺎﻥَ §ﻳُﺼَﻠِّﻲ ﻋَﻠَﻰ ﺭَاﺣِﻠَﺘِﻪِ ﻧَﺤْﻮَ اﻟﻤَﺸْﺮِﻕِ، ﻓَﺈِﺫَا ﺃَﺭَاﺩَ ﺃَﻥْ ﻳُﺼَﻠِّﻲَ اﻟﻤَﻜْﺘُﻮﺑَﺔَ ﻧَﺰَﻝَ، ﻓَﺎﺳْﺘَﻘْﺒَﻞَ اﻟﻘِﺒْﻠَﺔَ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் அமர்ந்து கிழக்கு நோக்கித் தொழுவார்கள். கடமையான தொழுகையைத் தொழ விரும்பும்போது வாகனத்திலிருந்து இறங்கிக் கிப்லாவை நோக்குவார்கள்.
ஷஹீஹ் புகாரி(1099)

எனவே…வாகனத்தில் பயணிக்கும் போது ஃபர்ளு தொழுகைகளை வாகனத்திலிருந்து இறங்கித்தான் தொழவேண்டும்…ஆனால் வாகனத்திலிருந்து கீழே இறங்கமுடியாத சூழ்நிலையோ அல்லது நீண்ட தூர பயண்மாக இருந்தால் வாகனத்தில் அமர்ந்தபடித்தொழுவது குற்றமில்லை…

அல்லாஹ் கூறுகிறான்…
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا

எந்த ஒரு ஆத்மாவையும் அல்லாஹ் அதன் சக்திக்கு உட்பட்டே தவிர சோதிக்கமாட்டான்..,(2;286)

مَا جَعَلَ عَلَيكُم فِي الدِّينِ مِن حَرَجٍ
இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.

(22:78)

يُرِيدُ اللَّهُ بِكُمُ اليُسرَ وَلا يُرِيدُ بِكُمُ العُسرَ
அல்லாஹ் எளிமையே உங்களுக்கு நாடுகிறான்..அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை..

அல்குர்ஆன்(2:185)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *