களையப்பட்ட முடியையும் நகத்தையும் புதைக்க வேண்டுமா?

முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர், பாகம் : 15, பக்கம் : 408,ஷுஅபுன் ஈமான்-பைஹகீ, பாகம் : 8, பக்கம் : 44, முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் : 8, பக்கம் : 47, லுஃபாவுல் உகைலீ, பாகம் : 4, பக்கம் : 332, அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் :201.

இந்நூல்களில் லுஃபாவுல் உகைலீ, அல்காமில் ஆகிய நூல்களில் இடம்பெற்றிரும் செய்தியில் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார். அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்ற இப்னுல் ஜனீத் கூறுகிறார்.

(ஆதாரம் : தன்ஸீஹு ஷரீஅத்துல் மர்ஃபூஆ, பாகம் : 1, பக்கம் : 73)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய ஹதீஸ்களை நான் உற்று நோக்கினேன். இவருடைய செய்திகளில் மறுக்கப்பட வேண்டிய செய்திகளைக் கண்டேன். எனவே இவருடைய செய்திகளை நான் எழுதிக் கொள்வதில்லை. இவர் என்னிடத்தில் உண் மையாளர் இல்லை என்று அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 5, பக்கம் : 104)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]