பைத்துல்மால்-بيت المال
———————-
பைத் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் வீடு,
மால் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் பொருள்.
இந்த இரண்டுவார்த்தையின் கூட்டையும் சேர்த்து பொருளகம் என்று சொல்லலாம்.
பொருளகம் என்றால் என்ன?
பொருட்களை சேர்த்துவைத்து அதை தேவையுடையோருக்கு பங்கிட்டுக் கொடுப்பது. எல்லாமும் எல்லோருக்கும் என்ற அடிப்படையில் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களால் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய வரலாற்று புரட்சி.
நாகரீகமும்,மனிதமும் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் கூட எந்த ஒரு அரசும் ஏற்படுத்தாத புரட்சி. மக்களின் வரிப்பணம் நாட்டை ஆள்பவர் சொந்த செலவிற்கே (சுருட்டுவதற்கே) என்று ஆகிவிட்ட நிலையிலும், பைத்துல்மாலின் தனி சிறப்பே அது தேவையுடையோரின் அல்லது ஏழைகளின் பணம் அதில் எந்த ஒரு தனிமனிதனும் அல்லது எந்த ஒரு அரசும் அந்தப் பணத்தில் அதிகாரம் செலுத்த முடியாது என்பது தான். பைத்துல்மால் இப்பொழுது ரொம்ப அவசியமா?
வட்டியை முழுவதுமாக துடைத்தெறிய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
வட்டி வாங்குவது,கொடுப்பது,அதற்கு கணக்கெழுதுவது,அதற்க்கு சாட்சி சொல்வது அனைத்தும் ஹராம் என்று மட்டும் நாம் ஒருவரிடம் சொன்னால்,
அப்போ கடன் நீங்க தரீங்களா? என்ற எதிர் கேள்விகள் தவிர்க்க இயலாதது. இதுப் போன்றவர்களின் கேள்விக்கு பதிலே இந்த பைத்துல்மால். இனி இதன் மூலம் படிப்புக்கோ, இன்ன பிற அவசிய தேவைக்கோ வட்டி இல்லா கடன் பெறலாம்.
கல்வி பொருளாதாரமயமாக்கப்பட்ட இந்த காலத்தில், அதனை கற்கவும், தொடரவும் பெரும் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதுவும் ஒரு முட்டுக்கட்டை என்றால் இதனை களையவும், கல்வி கற்க உதவவும் தான் பொது நிதி அமைப்பு அவசியமாகிறது. பைத்துல்மால் என்ற பொது நிதியை பெரிய ஜமாத் சிறிய ஜமாத் என்ற பாகுபாடில்லாமல் எல்லா ஊர்களிலும் அவரவர் சக்திக்கேற்ப ஏற்படுத்தினால் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்ற உதவும்.
சிறு துளி பெரு வெள்ளமாய் சிறியளவில் தொடங்கப்பட்ட பொது நிதியங்கள், பல ஆண்டுகளில் பொருளாதார பலம் பொருந்திய நிதியமாக பரிணாமித்து அதன் மூலம் பலரது தேவைகளுக்கு உதவி வருவதை பார்க்கிறோம்.
இது ஒவ்வொரு முஹல்லாவிலும் தொடர வேண்டுமானால் நாம் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, பைத்துல்மால் உருவாக உதவி புரிய வேண்டும்.
இதன் மூலம் நம் சமூதாயத்திற்கு விளையும் நன்மைகள் பல உண்டு இந்த பைத்துல்மாலை சிறப்புற நடைமுறைப்படுத்தினால் அதை கண்கூடாக பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.
இத்தகைய சிறப்புமிக்க பைத்துல்மாலை திறம்பட சிறப்பாக நடத்துவதென்பது கத்தியின் மேல் நடப்பதை விட மிகச் சிரமம். ஏன் என்றால் இதற்க்கு பொருளாதாரம் மிகவும் அவசியம்.
அத்தகைய தாராளமான பொருளாதரத்தை உலகெங்கும் வாழும் நமதூர் சகோதரர்களிடமும்,அனைத்து இஸ்லாமியர்களிடமும் எதிர்பார்த்துள்ளது இந்த பைத்துல்மால்.ஆகவே இஸ்லாமிய சகோதரர்களே புனிதமிகு இந்த ரமலான் மாதத்தில் உங்களுடைய ஜகாத், நன்கொடைகளை தாராளமாக் இதற்க்கு தந்துதவுங்கள்.
அல்லாஹ் ஹராமாக்கிய ஓர் பெரும் பாவத்தை(வட்டி) துடைத்தெறிய உதவுங்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு உதவ முன்வராவிட்டால் யார்தான் உதவி செய்வார் என் சகோதர சமூதாயமே.
நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நிச்சயம் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்த்தும்,நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும் மேலும் நம் இறப்பிற்கு பின்னரும் நிலையான நன்மைகளை தரக்கூடிய செயலாக(சதக்கத்துல் ஜாரியா) இது மாறிவிடும் இன்ஷா அல்லாஹ்.
———————
ஏகத்துவம்