பெருநாள் தொழுகை முறை

பெருநாள் தொழுகை மற்ற தொழுகைகளைப் போன்றது தான். ஆயினும் இதற்கென சில கூடுதல் அம்சங்கள் உள்ளன. எனவே, இந்தக் கூடுதல் அம்சங்கள் எவை என்பதை மட்டும் நாம் பார்ப்போம். மற்றபடி உளூச் செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்ற தொழுகைக்கு உள்ள அனைத்துக் காரியங்களும் பெருநாள் தொழுகைக்கும் செய்யப்பட வேண்டும்.

பெருநாள் தொழுகைக்காக நின்றவுடன் இமாம், பெருநாள் தொழுகைக்கான நிய்யத் சொல்லிக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. நிய்யத் என்பதன் பொருள் மனதால் எண்ணுவதாகும். வாயால் மொழிவதல்ல! எந்த வணக்கத்தில் ஈடுபட்டாலும் வணக்கத்தில் ஈடுபடும் எண்ணம் இருப்பது அவசியமாகும். வாயால் சொல்வது நபிவழியல்ல! இதை முன்பே நாம் விளக்கியுள்ளோம்.

கூடுதல் தக்பீர்கள்

சாதாரண தொழுகைகல் சொல்லப்படும் வழக்கமான தக்பீர்களை விட பெருநாள் தொழுகையில் கூடுதலான தக்பீர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களுமாக மொத்தம் 12 தக்பீர்கள் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதி 492 அபூதாவூத்


இந்த ஹதீஸில் 7+5 தக்பீர்களை கிராஅத்திற்கு முன்பு சொல்ல வேண்டும் என்று கூறப்படுகின்றது.

சாதாரண தொழுகைகல் உள்ள எல்லா அம்சங்களும் பெருநாள் தொழுகையிலும் உண்டு என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அந்த அடிப்படையில் தக்பீர் தஹ்ரீமாவிற்குப் பிறகு ஓத வேண்டிய அல்லாஹும்ம பாஇத் பைனீ…… அல்லது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ….. போன்ற துஆக்கல் ஏதேனும் ஒன்றை ஓதிக் கொள்ள வேண்டும். பிறகு 7 தக்பீர்கள் கூற வேண்டும். பிறகு கிராஅத் ஓத வேண்டும்.

ஒவ்வொரு தக்பீருக்குமிடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீசும் இல்லை. ஆனால் இன்று நடைமுறையில் தக்பீர் சொல்லும் போது கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் தக்பீர் என்ற சொல்லை தக்பீர் கட்டுதல் என்ற அர்த்தத்தில் விளங்கியிருப்பது தான்.

தக்பீர்களுக்கு இடையில்….

தஹ்லீல் என்றால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுதல்
தஸ்பீஹ் என்றால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுதல்
தஹ்மீத் என்றால் அல்ஹம்துல்லாஹ் என்று சொல்லுதல்
எனப் பொருள்.

இதே போல் தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்று சொல்வது தான் இதன் பொருளாகும்.

தொழுகைக்குப் பிறகு 33 தடவை தக்பீர் சொல்ல வேண்டும் என்றால் 33 தடவை கைகளை நெஞ்சின் மீது அவிழ்த்துக் கட்டுதல் என்று விளங்க மாட்டோம். இது போன்று தான் 7+5 தக்பீர்கள் சொல்வார்கள் என்பதற்கு கைகளை அவிழ்த்துக் கட்டுதல் என்று பொருள் கொள்ளக் கூடாது. 7+5 தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்பது தான் இதன் பொருள். இந்தக் கூடுதல் தக்பீர்களுக்கு இடையில் ஏதேனும் திக்ருகள் சொல்ல வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் என்ற திக்ரை தக்பீர்களுக்கிடையில் கூறும் வழக்கம் சில பகுதிகல் இருந்து வருகின்றது. இதற்கும் நபி வழியில் ஆதாரம் இல்லை.

இந்த தக்பீர்களுக்கு இடையில் ஓத வேண்டும் என எந்த ஒரு திக்ரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளைக் கட்டிய நிலையிலேயே அல்லாஹு அக்பர் என ஏழு தடவை கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ ஆதாரம் ஏதுமில்லை.

ஓத வேண்டிய அத்தியாயங்கள்

பெருநாள் தொழுகையில் தக்பீர்கள் கூறிய பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதிவிட்டு ஓத வேண்டிய சூராக்கள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (அத்தியாயம்: 87) ஹல் அதாக ஹதீசுல் காஷியா (அத்தியாயம்: 88) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர். பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் வந்து விட்டால் அவ்விரண்டிலுமே மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1452

அபூ வாகித் அல்லைஸி (ரலி)யிடம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

 

 என்று பதிலத்தார்கள்.

நூல்: முஸ்லிம் 1477

மேற்கண்ட ஹதீஸ்கள் என்னென்ன அத்தியாயங்களை பெருநாள் தொழுகையில் ஓத வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிய சூறாக்களை நபித்தோழர்கள் அறிவிப்பதிருந்து கிராஅத்தைச் சப்தமிட்டு ஓத வேண்டும் என்பதும் தெவாகின்றது.

இவ்வாறாக மற்ற தொழுகைகளைப் போன்ற ருகூவு, சுஜுதுடன் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *