காலமானார் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும்…
உயிரோடு இருந்தவர் உயிரை இழந்து காலமாக மாறிவிட்டார் என்கிறார்கள்.
காலமானார் என்ற சொல் அழியாதவன் (நித்திய ஜீவன்) என்ற பொருள்படும் விதமாக இந்துக்களால் சொல்லப்படுகிறது.
ஜீவனாக இருந்தவர் நித்திய ஜீவனாக மாறிவிட்டார் என்ற அர்த்தத்தில் சொல்கிறார்கள்.
காலம், நித்திய ஜீவன், அழியாதவன் இந்த மூன்று வார்த்தைகளுக்குமே கடவுள் என்று பொருள் தரும்…
//அல்லாஹ்வும் தன்னை காலம் என்று அழைக்கிறான்…//
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: ஸஹீஹுல் புகாரி: 4826