ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா❓
உறவினர்கள் தேவையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனல் சிலர் அவர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறுகின்றார்கள். விளக்கவும்.
இஸ்லாமிய அரசாக இருந்தால் அரசாங்கமே ஜகாத்தை வசூலித்து விநியோகிக்கும் என்பதால் அப்போது இந்தக் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இஸ்லாமிய அரசு இல்லாத பகுதிகளில் தனிப்பட்ட முறையில் ஜகாத் வழங்கும் போது, அதை யாருக்கு வழங்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும்,கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 9:60
இந்த வசனத்தில் ஜகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்களின் பட்டியலை அல்லாஹ் கூறுகின்றான். இந்த அடிப்படையில் உள்ள ஒருவர் உறவினராக இருந்தாலும் அவரிடம் ஜகாத்தை வழங்குவதற்குத் தடையேதும் இல்லை.
—————
ஏகத்துவம்