எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் (என்ற வரைமுறை உண்டா) என்பதும் குர்ஆனில் உங்களுக்கு சுலபமான அளவு ஓதுங்கள் எனும் (73:20ஆவது) இறைவசனமும்.
5051 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (கூஃபா நகர நீதிபதி) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், ஒரு மனிதர் (தொழுகையில், அல்லது நாளொன்றுக்கு) குர்ஆனிலிருந்து (குறைந்தது) எவ்வளவு ஓதினால் போதும் என்று நான் ஆய்வு செய்த போது, மூன்று வசனங்களை விடக் குறைவான (வசனங்களைக் கொண்ட) ஓர் அத்தியாயத்தை நான் காணவில்லை; அதனால் மூன்று வசனங்களுக்குக் குறைவாக ஒருவர் ஓதுவது முறையாகாது என்ற முடிவுக்கு வந்தேன் என்று கூறினார்கள்.
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூ மஸ்ஊத் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது, அன்னாரை நான் சந்தித்தேன். அப்போது அவர்கள், யார் அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை (285, 286) இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அவ்விரண்டுமே போதும் என்ற நபிமொழியைக் கூறினார்கள்.64
5052 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாரம்பரியமிக்க ஒரு பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்து வைத்தார்கள். (என் தந்தை) அம்ர் (ரலி) அவர்கள் தம் மருமகளை அணுகி அவளுடைய கணவர் குறித்துக் கேட்பது (அதாவது என்னைப் பற்றி விசாரிப்பது) வழக்கம்.
அப்போது அவள், அவர் நல்ல மனிதர்தாம்; (ஆனால்,) அவர் படுக்கைக்கு வரவுமில்லை; அவரிடம் நான் வந்து சேர்ந்தது முதல் எனக்காகத் திரைச் சீலையை அவர் இழுத்து மூடவுமில்லை என்று சொல்வாள். இதே நிலை நீடித்த போது, (என் தந்தை) அம்ர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றிக்) கூறினார்கள். அப்போது, என்னை வந்து சந்திக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், நீ எப்படி நோன்பு நோற்கிறாய்? என்று ƒகட்டார்கள். நான், தினந்தோறும் நோன்பு நோற்கிறேன் என்று சொன்னேன். (குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய் என்று கேட்டார்கள். நான்,
ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்) என்று சொன்னேன். அவர்கள், மாதந் தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை முழுமையாக) ஓதிக்கொள் என்று சொன்னார்கள். நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) சக்திபெற்றுள்ளேன் என்று கூறினேன். அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள் என்றார்கள். நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) எனக்கு சக்தி உண்டு என்று கூறினேன். இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்! என்று சொன்னார்கள். நான் இதைவிடவும் அதிக மாக (நோன்பு நோற்க) சக்தி பெற்றுள்ளேன் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் உயர்ந்த நோன்பு வழக்கப்படி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றுக்கொள்! மேலும், ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி(முடித்து)க்கொள் என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய இந்தச் சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது) தள்ளாமை வயதையடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன்.
ளஅறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:ன
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் (தமது முதுமையில்) குர்ஆனில் ஏழில் ஒரு பாகத்தை (அதாவது ஒரு மன்ஸிலை) தம் வீட்டாரில் சிலரிடம் பகலில் ஓதிக் காட்டு வார்கள். (இரவில்) ஓதவேண்டுமென அவர்கள் விரும்பிய பாகத்தையே (இவ்வாறு) பகலில் ஓதிக் காட்டுவார்கள். இரவில் (ஓதும் போது) சுலபமாக இருக்கட்டும் என்பதே இதற்குக் காரணம். அன்னார் (நோன்பு நோற்க) சக்தி பெறவேண்டும் என விரும்பும் போது, பல நாட்கள் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு அந்நாட்களைக் கணக்கில் வைத்துக் கொள்வார்கள். பிறகு (வசதிப்படும் போது) அதே அளவு நாட்கள் நோன்பு நோற்பார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்த போது (-நபியவர்கள் இறந்த போது-) தாம் செய்து வந்த எந்த வழிபாட்டையும் கைவிடுவதை அன்னார் விரும்பாததே இதற்குக் காரணம்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:
ளஅப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர் களிடம், மாதம் ஒருமுறை குர்ஆனை ஓதி நிறைவுசெய் என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அதைவிட அதிகமாக ஓதுவதற்குத் தம்மால் முடியும் என அன்னார் தெரிவிக்க, நபியவர்கள் நாட்களைக் குறைத்துக் கொண்டே வந்துன மூன்று நாட்களுக்கு ஒரு முறை, அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை (குர்ஆனை ஓதி நிறைவுசெய் என்று நபியவர்கள் கூறினார்கள்) என அறிவிப்பாளர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். ஏழு நாட்களுக்கு ஒரு முறை’ என்றே பெரும்பாலோர் கூறியுள்ளனர்.
5053 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்கிறாய்? என்று கேட்டார்கள்.
5054 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்! என்று கூறினார்கள். அப்போது நான், (அதை விடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது என்று கூறினேன். அப்படியானால், ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே என்று சொன்னார்கள்.
உங்களால் முடிந்தவரை குர்ஆன் ஓதுங்கள் இதற்குள் தான் கண்டிப்பாக முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் மார்க்கத்தில் இல்லை இலகுவாக ஓதக்கூடியவர் விரைவில் முடிப்பார்கள் நிதானமாக ஓதக்கூடியவருக்கு கெஞ்சம் நேரம் எடுக்கும் இதில் தவறில்லை