——————
வானவர்கள்
——————

மலக்குமார்களின் தோற்றம்
—————————————-
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி­)
நூல் : முஸ்லி­ம் 5314

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண் டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகு களைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 35:1)

நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீல்(அலை) அவர்களை 600 இறக்கை உடையவர்களாகக் கண்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி­)
நூல் : புகாரீ 4857

எண்ணிக்கை
—————————————-
எனக்கு பைதுல் மஃமூர் காட்டப்பட்டது. நான் அதைப் பற்றி ஜிப்ரயீ­டம் கேட்டேன். அவர் இது பைதுல் மஃமூர் ஆகும். இதில் நாள்தோறும் எழுபதினாயிரம் மலக்குமார்கள் தொழுகின்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் அவர்களில் யாரும் அதில் நுழைவதில்லை என்று கூறினார்கள்.

நூல் : புகாரீ 3207


பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள்
—————————————-

  1. ஜிப்ரீல் (அலை) : (அல்குர்ஆன் 2:98)
  2. மிக்காயீல் (அலை) : (அல்குர்ஆன் 2:98)
  3. இஸ்ராஃபீல் (அலை) : (முஸ்லி­ம் 1289)
  4. மா­லிக்(அலை) இவர் நரகத்தின் காவலாளி ஆவார். (43:77)
    வஹீயை கொண்டு வருதல்
    —————————————-
    என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்!” என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான்.

(அல்குர்ஆன் 16:2)

நன்மை, தீமைகளைப் பதிவு செய்தல்
—————————————-
உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.

(அல் குர்ஆன் 82 :10,11,12)

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத் தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

(அல்குர்ஆன் 50:17,18)


உயிரைக் கைப்பற்றுதல்
—————————————-
உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 32:11)

பாதுகாவல்
—————————————-
மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர்.

(அல்குர்ஆன் 13:11)

அர்ஷைச் சுமப்பவர்கள்
—————————————-
வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.

(அல்குர்ஆன் 69:17)

நரகக் காவலாளிகள்
—————————————-
அதன் மேல் பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர். நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போ ருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்க வில்லை.

(அல்குர்ஆன் 74:30,31)

கருவறையில் விதியை எழுதுதல் தாயின் வயிற்றிலுள்ள கரு, நான்கு மாதங்களை அடைந்ததும் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி அவனுடைய வாழ்வாதாரங்கள், ஆயுள், செயல்கள் ஆகியவை எவ்வளவு என்றும் அதன் முடிவு எவ்வாறு அமையும் என்பதையும் எழுதுமாறு கட்டளையிடுவான்.

நூல் : புகாரீ 7454

கப்ரில் விசாரணை செய்தல்
—————————————-

கப்ரில் மய்யித் வைக்கப்பட்டதும் இரு மலக்குகள் அதனிடம் வந்து அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும், நபி யார் என்பதாகவும் கேள்விகளைக் கேட்பார்கள்.

நூல் : திர்மிதீ 991


ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *