பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கான ஓர் இடம் தான் பள்ளிவாசல். அந்த பள்ளிவாசலில் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம் . எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியது என்ன ? செய்யக்கூடாதது என்ன ? என்பதை அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவு படுத்தயுள்ளர்கள். அவற்றை காண்போம்.

1.பாங்கு சப்தம் கேட்ட பின்னர் பள்ளிவாசலை விட்டு வெளியேறக்கூடாது.

நாங்கள் அபூஹுரைரா (ரலி) யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம் அப்போது முஅத்தின் பாங்கு கூறினார், ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூஹுரைரா (ரலி) அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள், அவர் பள்ளியிலிருந்து வெளியேறி வெளியேறி விட்டார், அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபூஷஅதா(ரலி) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம், 1521

பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்பட்டால் பள்ளிவாசலில் கடமையான தொழுகையை நிரைவேற்றிய பிறகு தான் வெளியேற வேண்டும். பள்ளிவாசலில் பாங்கு சொன்ன பிறகு பள்ளியை விட்டு வெளியேறக்கூடாது. என்று மேற்கண்ட செய்தி நமக்கு தெளிவுபடுத்துகிறது.

2.பள்ளியில் சப்தமிட்டு பேசாமலிருப்பது, அங்கு தர்க்கித்துக் கொள்ளாமலிருப்பது

நான் பள்ளியில் நின்றுகொண்டிருந்தேன் அப்போது ஒருவர் என்னை கல்லால் அடித்தார், அப்போது உமர் பின் கத்தாப் அவர்களை அங்கு கண்டேன், நீ சென்று அந்த இருவரையும் என்னிடம் கொண்டு வா என்று என்னிடம் கூறினார்கள், அவர்கள்  இருவரையும் அவரிடம் கொண்டு வந்தேன், அவர், அவர்கள் அவ்விருவரிடமும் நீங்கள் இருவரும் யார்? அல்லது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார், அவர்கள் இருவரும் நாங்கள் தாயிபில் இருந்து வருகிறோம் என்று கூறினார், நீங்கள் இருவரும் இந்த ஊர்வாசிகளாக இருந்திருந்தால் உங்கள் இருவரையும் காயப்படுத்தியிருப்பேன், அல்லாஹ்வின் தூதருடைய பள்ளியில் உங்கள் இருவரின் சப்தத்தை உயர்த்துகிறீர்களா?! என்று யஸீத் பின் சாயிப் கூறினார்.

நூல் : புகாரி 470.

பள்ளிவாசலில் விளையாடுவதோ, தேவையற்ற செயலில் ஈடுபடுவதோ, தேவையற்ற பேச்சுக்களை பேசுவதோ, வணக்க வழிபாட்டிற்கு இடஞ்சல் ஏற்படுத்துதலை நாம்  தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 3.விற்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும் வாங்கு வதையும், தவறிப்போனவற்றைத் தேடுவதையும், ஜூம்ஆ தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்வதையும் தடை செய்துள்ளார்கள் என்று ஷூஐப் பின் அம்ர் கூறினார்,

நூல்: அபூ தாவூத் 1081.

பள்ளிவாசலில் வியாபாரம் செய்வதையும், தொலைந்துபோன பொருட்களை தேடுவதும்,நபி (ஸல்) அவர்கள் நமக்கு தடை செய்து உள்ளார்கள். 

4.பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்

பள்ளியில் காரி உமிழ்வது பாவம் அதற்கு பரிகாரம் அதைப் பொதைத்து விடுவதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் கூறினார்கள்.

நூல்: புகாரி 415, முஸ்லிம் 1259.

  1. பள்ளிக்குச் செல்லும் முன்னர் தொழுகையாளிகளுக்கு தொலை ஏற்படும் பூண்டு, வெங்காயம் போன்ற வாசம் உள்ள பொருள்களை உண்ணாமல் இருப்பது.

இந்த பூண்டுக் கீரையை யாரேனும் தின்றால் என்றும் – மற்றோரு தடவை இந்த வெங்காயம், பூண்டு, வெங்காயக் கீரை போன்றவற்றை யாரேனும் தின்றால் அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம், ஏனெனில் ஆதமுடய மக்கள் எதிலிருந்து நோவினை அடைவார்களோ அதனால் மலக்குகளும் நோவினை அடைகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் ஜாபிர் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1282.

6.பள்ளிக்குள் நுழைந்தவுடன் இரண்டு ரகஅத் தொழுது விட்டு அமர வேண்டும்.

 

உங்களில் ஒருவர் பள்ளியினுள் நுழைந்தால் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரகஅத் துகள் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா அஸ்ஸலமிய்யி கூறினார்கள்.

புகாரி 415.

பள்ளிவாசல் என்பது அல்லாஹ்வின் இல்லாமாகும். அந்த இல்லத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய அணைத்து ஒழுங்கு முறைகளும் கடைபிடிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்க வேண்டும் …

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *